மிஸ் யுனிவர்ஸ் போட்டியில், இனி அம்மாக்களுக்கும் அனுமதி

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (13) | |
Advertisement
அடுத்தாண்டு முதல் திருமணமான பெண்கள், தாய்மார்களும் உலக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கலாமென அழகி போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.72வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகள் அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவுள்ளது. தற்போது வரை பிரபஞ்ச அழகி போட்டியில், திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பெற்றுகொள்ளாத 18 வயது முதல் 28 வயது வரை பெண்கள் மட்டுமே பங்கேற்க
மிஸ் யுனிவர்ஸ், பிரபஞ்ச அழகி, புதிய மாற்றம், The Miss Universe, 72nd Miss Universe pageant in 2023, Women, success


அடுத்தாண்டு முதல் திருமணமான பெண்கள், தாய்மார்களும் உலக பிரபஞ்ச அழகி போட்டியில் பங்கேற்கலாமென அழகி போட்டியை நடத்தும் அமைப்பு அறிவித்துள்ளது.


72வது மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டிகள் அடுத்தாண்டு மடகாஸ்கர் மற்றும் ரோமானியாவில் நடைபெறவுள்ளது. தற்போது வரை பிரபஞ்ச அழகி போட்டியில், திருமணம் ஆகாத பெண்கள், குழந்தை பெற்றுகொள்ளாத 18 வயது முதல் 28 வயது வரை பெண்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் அழகி போட்டியில் பட்டத்தை வெல்ல, திருமணம் செய்து கொள்ளாத பெண்ணாகவும், குழந்தை பெற்றுகொள்ளாதவர்களாக இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்பட்டது.இந்நிலையில், போட்டியை நடத்தும் அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் "பெண்கள் தங்கள் வாழ்க்கையை நிர்வகிக்கும் திறமையை கொண்டிருக்க வேண்டும். ஒரு பெண்ணின் தனிப்பட்ட முடிவுகள் அவர்களின் வெற்றிக்கு தடையாக இருக்க கூடாதென நாங்கள் அனைவரும் நம்புகிறோம்' என தெரிவித்துள்ளது.

2020ல் பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற ஆண்ட்ரியா மெசா, புதிய அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், 'நான் உண்மையாக இந்த மாற்றத்தை விரும்புகிறேன். சமூகத்தில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை போன்று, முன்பு ஆண்கள் மட்டுமே ஆக்கிரமித்திருந்த தலைமை பதவிகளை இப்போது பெண்களும் ஆக்கிரமிப்பதை போல, இதுவே போட்டியாளர்கள் மாற்ற வேண்டிய நேரமிது. குடும்ப பெண்களுக்கும் பாதையை திறந்துவிட வேண்டிய நேரமிது.


latest tamil newsசிலர் இந்த மாற்றத்தை எதிர்க்க கூடும். ஏனெனில், அவர்கள் திருமணமாகாத இளம்பெண்களை மட்டுமே விரும்புவராக இருப்பர். வெளிப்புற தோற்றத்தில் இருந்து பெண்கள் எப்போதும் கச்சிதமாக இருக்க வேண்டும். வெளியில் இருந்து அணுக முடியாதவர்களாக இருக்க வேண்டுமென விரும்புவர்கள். முந்தைய ஒன்று பாலியல் ரீதியானது. பிந்தைய ஒன்று யதார்த்தம் இல்லாதது.'

இவ்வாறு அவர் கூறினார்.

ஆண்ட்ரியா மெசா, பிரபஞ்ச அழகி பட்டம் வென்ற சில மணி நேரங்களுக்கு பின், ஏற்கனவே திருமணம் ஆனவர் என சமூகவலைதளங்களில் சர்ச்சைக்குரிய குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. அதற்கு அவரது இன்ஸ்டாவில் மெசா திருமண ஆடையில் ஒருவருடன் நிற்கும் புகைப்படம் இருந்ததே காரணம். அதற்கு பிறகு, மெக்சிகோ சுற்றுலா நிறுவனம் ஒன்றிற்காக, அம்பாசிடராக போட்டோஷீட் நடத்தியதாக அழகி போட்டி அமைப்பு விளக்கமளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
21-ஆக-202219:44:05 IST Report Abuse
S.Baliah Seer முதலில் அழகிப்போட்டி என்பதே ஒரு செக்ஸ் நடவடிக்கைதான். தன் உடலை பிறர் ரசிக்க காட்டுவதால் வயூரிஸ்ட் பழக்கம் மக்களிடையே ஏற்பட்ட காரணமாகிறது.அழகு என்பது சதையில் இல்லை.அது பெண்களின் அன்பு மற்றும் இரக்க குணத்தின் வெளிப்பாடு.உடலைக் காட்டுவதால் அன்பின் மினுமினுப்போ அல்லது பாசத்தின் பளபளப்போ வெளிப்படாது.
Rate this:
Suri - Chennai,இந்தியா
21-ஆக-202220:14:36 IST Report Abuse
Suri,,,,...
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-ஆக-202219:35:48 IST Report Abuse
Ramesh Sargam அப்ப இனி நடக்கப்போகும் போட்டிகளில், மகள்-அம்மா இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-ஆக-202219:35:10 IST Report Abuse
Ramesh Sargam அப்ப இனி நடக்கப்போகும் போட்டிகளில், மகள்-அம்மா இடையே, மருமகள்-மாமியார் இடையே, மருமகள்-நாத்தனார் இடையே கடும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X