அசாமில் 2 சர்வதேச பயங்கரவாதிகள் கைது| Dinamalar

அசாமில் 2 சர்வதேச பயங்கரவாதிகள் கைது

Added : ஆக 21, 2022 | கருத்துகள் (7) | |
கோல்பரா: அசாமில், அல்கொய்தாவுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அல்கொய்தாவின் இந்திய துணை கண்டம் அமைப்பை சேர்ந்த இவர்கள், டினிகுனியா மசூதியின் இமாம் அப்துஸ் சுபான் மற்றும் திலபரா நதுன் மசூதியின் இமான் ஜலாலுதீன் ஷேக் ஆகியோரை பல மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய
terrorist, Assam, Goalpara,Al-Qaeda, suspect,

கோல்பரா: அசாமில், அல்கொய்தாவுடன் தொடர்புடைய இரண்டு பயங்கரவாதிகளை போலீசார் கைது செய்தனர். அல்கொய்தாவின் இந்திய துணை கண்டம் அமைப்பை சேர்ந்த இவர்கள், டினிகுனியா மசூதியின் இமாம் அப்துஸ் சுபான் மற்றும் திலபரா நதுன் மசூதியின் இமான் ஜலாலுதீன் ஷேக் ஆகியோரை பல மணி நேர விசாரணைக்கு பின்னர் கைது செய்தனர்.

இது தொடர்பாக போலீசார் கூறுகையில், ஜிகாதி அமைப்புகளுடன் தொடர்புடைய அபாஸ் அலி என்பவன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டான். அவனிடம் நடத்திய விசாரணையில் இரண்டு பேரை பற்றிய விபரங்கள் தெரியவந்தது. அவர்களின் வீட்டில் நடந்த சோதனையில் அல்கொய்தா தொடர்புடைய பொருட்கள், ஜிகாதி பொருட்கள், போஸ்டர்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X