சீனாவில் நிறுவப்பட்ட ராட்சத காற்று சுத்திகரிப்பான்!

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி டேன் ருசேகார்டேவின் புதிய கண்டுபிடிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2013-ல் சீனாவில் காற்றின் தரம் கணிசமாகக் குறைந்ததால் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது. அதிகரிக்கும் கார்பன் புகை காரணமாகவும், தூசு துகள்களாலும் சீனர்கள் பலர் சுவாசம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகி வந்தனர். இதனையடுத்து விஞ்ஞானி
ஏர் ப்யூரிஃபையர், சீனாவில் ராட்சத ப்யூரிஃபையர், air pollution, high-tech solutions

நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானி டேன் ருசேகார்டேவின் புதிய கண்டுபிடிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த 2013-ல் சீனாவில் காற்றின் தரம் கணிசமாகக் குறைந்ததால் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்தது.


latest tamil news



அதிகரிக்கும் கார்பன் புகை காரணமாகவும், தூசு துகள்களாலும் சீனர்கள் பலர் சுவாசம் தொடர்பான நோய்களுக்கு உள்ளாகி வந்தனர். இதனையடுத்து விஞ்ஞானி டேன், ஏழு மீட்டர் உயரம் கொண்ட பெரிய கட்டடம் போன்ற ராட்சத காற்று ப்யூரிஃபையரை உருவாக்கினர். இந்த ப்யூரிஃபையர் சீனாவின் பூங்கா ஒன்றில் நடப்பட்டது.


latest tamil news



சாதாரண காற்று ப்யூரிஃபையர்கள் அதிகளவு மின்சாரத்தைப் பயன்படுத்தும். ஆனால் டேன் உருவாக்கிய இந்த சில்வர் நிறம் கொண்ட மின்காந்த ஏர் ப்யூரிஃபையர் குறைந்த மின்சாரத்தில் இயங்கும். ஒரு ஏக்கர் நிலத்தில் உள்ள காற்று மாசுவைப் போக்கும். இந்த ப்யூரிஃபையரின் ஒரு பக்கத்தில் மின்காந்த அலைகளால் ஈர்க்கப்படும் நுண் துகள்கள் உறிஞ்சப்பட்டு மற்றொரு பக்கம் வழியாக சுத்தமான காற்று வெளியிடப்படும். இதேபோல சீனாவில் பல பொது இடங்களில் இந்த ப்யூரிஃபையரை நட சீன அரசு அனுமதி வழங்கியது. இது விரைவில் இந்தியா, ஜப்பான் உள்ளிட்ட இதர ஆசிய நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்பட வாய்ப்புள்ளது குறிப்பிடத்தக்கது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajesh -  ( Posted via: Dinamalar Android App )
22-ஆக-202206:49:34 IST Report Abuse
 rajesh மரம் இயற்கையான purifier. அத வெட்டி போட்டு, செயற்கை purifier தேடும் அறிவில் தான் உள்ளோம்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
21-ஆக-202219:08:00 IST Report Abuse
Ramesh Sargam சீனாவில் உற்பத்தி செய்யப்படும் பொருட்களின் தரம்தான் எப்பொழுதும் சரியாக இருக்காது. இப்ப சீன நாட்டில் வீசப்படும் காற்றின் தரமும் மோசமாக உள்ளது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-ஆக-202218:59:04 IST Report Abuse
Kasimani Baskaran ஷங்காய் நகரில் தொழிற்பேட்டைகளில் நூறு மீட்டர் கூட தெளிவாக பார்க்க முடியாது. மழை பெய்தால் மட்டுமே காற்று தூய்மையாகும். ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X