இலவசங்கள் குறித்த தாக்கம் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும்: ரிசர்வ் வங்கி

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | கருத்துகள் (47) | |
Advertisement
புதுடில்லி: இலவசங்கள் எல்லாம் ஒரு போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அதன் தாக்கம் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் என ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளார்.இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: இலவசங்கள் எல்லாம் ஒரு போதும், 'இலவசமாக' வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த வாக்குறுதியை
Freebies, Free, Voters, Impact, RBI Member,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி: இலவசங்கள் எல்லாம் ஒரு போதும் இலவசமாக வழங்கப்படவில்லை. அதன் தாக்கம் வாக்காளர்களுக்கு தெரிய வேண்டும் என ரிசர்வ் வங்கியின் நிதிக்கொள்கை குழு உறுப்பினர் அசிமா கோயல் கூறியுள்ளார்.

இது தொடர்பாக பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டி: இலவசங்கள் எல்லாம் ஒரு போதும், 'இலவசமாக' வழங்கப்படவில்லை. அரசியல் கட்சிகள் இலவசங்கள் குறித்த வாக்குறுதியை வழங்கும்போது, அவர்கள் தான் அதற்கான நிதி மற்றும் நிதி ஆதாரங்கள் குறித்து வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும்.

இலவசங்கள் உண்மையில்உங்களுக்கு இலவசமாக கிடைப்பதில்லை. அரசு, இலவசங்களை வழங்கும்போது எங்காவது ஒரு செலவு விதிக்கப்படுகிறது. ஆனால், இது திறனை வளர்க்கும் பொது பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு செலவாகும். பஞ்சாபில் இலவச மின்சாரம் கொடுத்ததால் அங்கே நிலத்தடி நீர் அளவு குறைந்தது தான் மிச்சம். இலவசங்களுக்கு செலவிடுவதால் மக்களுக்கு தரமான கல்வி, சுகாதாரம், காற்று, குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் கிடைக்காமல் போய்விடும்.


latest tamil news


அதனால், கட்சிகள் இலவசங்களை அறிவிக்கும்போது, அதற்கான நிதி எங்கிருந்து வரும் என்பதை வாக்காளர்களுக்கு விளக்க வேண்டும். அதனால், மக்கள் போட்டி வெகுஜன ஈர்ப்பு வாக்குறுதிகளால், ஈர்க்கப்படுவது குறையும். இவ்வாறு அசிமா கோயல் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (47)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஜெய்ஹிந்த்புரம் - மதுரை,இந்தியா
22-ஆக-202209:44:50 IST Report Abuse
ஜெய்ஹிந்த்புரம் பொருளாதாரத்தை பாதாளத்தில் தள்ளிய பணமதிப்பு இழப்பு திட்டம், கவைக்கு உதவாத புல்லட் டிரெயின், பல்லாயிரம் கோடிகளில் தேவையற்ற பிரம்மாண்டமான சிலைகள், ஐந்தாண்டுகளில் பணமுதலைகளுக்கு தரப்பட்ட 10 லட்சம் கோடி கடன்தள்ளுபடி, பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு தரப்படும் பல்லாயிரம் கோடி சலுகைகள் - இவைகளை விடவா, தகவலே பிரதானம் என்ற இந்த காலத்தில், அதை தெரிந்து கொள்ள வசதியாக மாணவர்களுக்கு கணினி, ஏழை குடும்பத்துக்கு தொலைக்காட்சிப்பெட்டி என்று கொடுப்பது தவறாக தெரிகிறது உமக்கு? சொல்பவர்களுக்கு தான் புத்தியில்லை என்றால் ஒத்து ஊதுவதற்கு நீங்கள் வரணுமா??
Rate this:
Cancel
jeya kumar -  ( Posted via: Dinamalar Android App )
22-ஆக-202207:00:46 IST Report Abuse
jeya kumar Next version of SEBI scam Chitra... Ha ha
Rate this:
Cancel
Rangarajan - Ambathur,இந்தியா
22-ஆக-202204:20:03 IST Report Abuse
Rangarajan இலவசங்கள் அறிவிக்கும் அரசியல் கட்சிகள் அந்தந்த அரசியல் கட்சிகளின் சொந்த பணத்தில் இலவசம் வழங்க வேண்டும் அரசின் கஜானா பணத்தை எடுக்கக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று விரும்புகிறேன்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X