நவீன பைக்குகளில் ஏன் செயின் ஸ்ப்ராக்கெட் மட் கார்டு பொருத்தப்படுவதில்லை?

Updated : ஆக 21, 2022 | Added : ஆக 21, 2022 | |
Advertisement
நமது அப்பா, தாத்தா பயன்படுத்திய பழைய பஜாஸ் ஸ்கூட்டர், எம்-80, புல்லட், யமஹா ஆர்எக்ஸ்-100 உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் செயின் ஸ்ப்ராகெட் அமைந்துள்ள பாகம் மூடப்பட்டு இருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் யமஹா ஆர்15, ஜிக்ஸர், பல்சர் உள்ளிட்ட 150 சிசிக்கு மேற்பட்ட வாகனங்களில் பின் சக்கரத்தின் மையத்தில் செயின் ஸ்ப்ராக்கெட் வெளியே தெரியும். இதற்கு மட் கார்ட்
motorbikes chaincovers, chain cover is not there in bikes, செயின் ஸ்புராக்கெட், நவீன இருசக்கர வாகனங்கள்

நமது அப்பா, தாத்தா பயன்படுத்திய பழைய பஜாஸ் ஸ்கூட்டர், எம்-80, புல்லட், யமஹா ஆர்எக்ஸ்-100 உள்ளிட்ட இருசக்கர வாகனங்களில் செயின் ஸ்ப்ராகெட் அமைந்துள்ள பாகம் மூடப்பட்டு இருக்கும். ஆனால் இன்றைய இளைஞர்கள் பயன்படுத்தும் யமஹா ஆர்15, ஜிக்ஸர், பல்சர் உள்ளிட்ட 150 சிசிக்கு மேற்பட்ட வாகனங்களில் பின் சக்கரத்தின் மையத்தில் செயின் ஸ்ப்ராக்கெட் வெளியே தெரியும். இதற்கு மட் கார்ட் கொடுக்கப்பட்டு இருக்காது. இதற்கான காரணம் என்ன என பலருக்குத் தெரியாது. இதுகுறித்துத் தெரிந்துகொள்வோம்.

இரு சக்கர வாகனத்தின் முக்கியமான பாகங்களில் ஒன்று செயின் மற்றும் ஸ்ப்ராக்கெட். எஞ்சினின் சுழற்சிக்கு ஏற்ப வாகனத்தின் பின் சக்கரத்தை சுழல வைக்க காலாகாலமாக சிறிய மற்றும் பெரிய பல்சக்கரங்கள் (ஸ்ப்ராக்கெட்கள்), அதனை இணைக்கும் உலோக செயின் பயன்படுத்தப்படுகின்றன. இந்த ஸ்ப்ராக்கெட் பல் சக்கரத்தில் செயின் சரியாக மாட்டி இயங்கினால்தான் வாகனம் நகரும்.


latest tamil newsநாம் நமது வாகனத்தை சேறு, பள்ளம், மேட்டில் செலுத்தும்போது இந்த செயின்மீது அழுக்கு, சகதி படியும். இதனால் நாளடைவில் பல்சக்கரத்தின் பற்கள் தேய்ந்துவிடும். இதனைத் தடுக்கவே செயின் ஸ்புராக்கெட் செட்டுக்கு மட் கார்டு பொருத்தப்படும். இதனால் தூசி, சேறு உள்ளிட்டவற்றில் இருந்து செயின் ஸ்ப்ராக்கெட் பாதுகாக்கப்படும். அவற்றின் ஆயுளும் அதிகரிக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்னர் அதிக வேகம், ஆற்றல் அற்ற வாகனங்களுக்கு மெலிதான செயின் பயன்படுத்தப்பட்டது.

வாகனம் ஓட ஓட செயின் தளர்வடையும். இவற்றை வாகன சர்வீஸின்போது மெக்கானிக்குகள் முறுக்கிவிடுவர். மெலிதான செயின்களுக்கு அடிக்கடி சர்வீஸ் தேவைப்படாது. இவை அரிதாகவே பழுதடையும். இதனால் பழைய ஸ்பிளெண்டர், பேஷன் ப்ரோ உள்ளிட்ட வாகனங்களின் செயின் ஸ்ப்ராக்கெட் செட், மட் கார்டு கொண்டு முழுவதுமாக மூடப்படும். சர்வீஸின்போது மெக்கானிக் மட் கார்ட்-ஐ கழற்றுவார்.

ஆனால் தற்போது சந்தையில் உலவும் அதிக டார்க், பவர் கொண்ட வாகனங்களுக்கு பெரிய சக்கரம் மற்றும் கனமாக எஞ்சின் பொருத்தப்படுகிறது. இந்த சக்கரத்தை சுழலச்செய்ய கனமான செயின் மற்றும் வலுவான ஸ்ப்ராகெட் தேவைப்படும். இந்த செயின் ஸ்ப்ராகெட்டுக்கு அதிக சர்வீஸ் மற்றும் லூப்ரிகெண்ட் தேவைப்படும்.

இந்த வாகனங்களில் மட் கார்ட் பொருத்தினால் அவசரத்துக்கு மட் கார்டை கழற்றி செயின் சர்வீஸ் செய்ய முடியாது. மேலும் கனமான செயின் தளர்வடையும்போது மட் கார்டு மீது உராயும். எனவே ராயல் என்ஃபீல்டு, சுசூக்கி, யமஹா, கவாசகி உள்ளிட்ட பல நிறுவனங்களும் தங்களது பவர் பைக்குகளுக்கு செயின் மட் கார்டு பொருத்துவதில்லை. ஆனால் மட் கார்ட் இல்லாத செயின் ஸ்ப்ராக்கெட் மீது அடிக்கடி அழுக்கு, தூசி படியும் என்பது இதன் பின்னடைவு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X