வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை : நஷ்டத்தை குறைப்பதற்காக, புதிய பால் பாக்கெட் விற்பனை செய்ய, ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
ஆவின் நிறுவனம் வாயிலாக நாள்தோறும், 40 லட்சம் லிட்டர் பால் கொள்முதல் செய்யப்பட்டு வந்தது. இது, கொழுப்பு சத்து அடிப்படையில், மூன்று தரங்களாக பிரிக்கப்பட்டு, ஆரஞ்ச், பச்சை, நீல நிற பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படுகிறது. தி.மு.க., அரசு பொறுப்பேற்றதும், ஆவின் பால் விலை லிட்டருக்கு, மூன்று ரூபாய் குறைக்கப்பட்டது. அதன்படி, ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் 500 மி.லி., 24 ரூபாய்க்கும், பச்சை நிற பாக்கெட் 22 ரூபாய்க்கும், நீல நிற பாக்கெட் 21 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
அதேநேரத்தில், தனியார் பால் விலை மூன்று முறை உயர்த்தப்பட்டு உள்ளது. தனியார் பால், 500 மி.லி., 34 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதனால், பொது மக்கள் மட்டுமின்றி ஹோட்டல்கள், 'கேன்டீன்'கள், டீக்கடைகள் உள்ளிட்டவற்றின் தேவைக்கு, ஆவின் பால் அதிகளவில் வாங்கப்படுகிறது. ஆவின் பால் விற்பனை அதிகரித்துள்ள நிலையில் கொள்முதல் குறைந்து உள்ளது. விலை குறைப்பால், நஷ்டத்திலும் ஆவின் நிறுவனம் சிக்கியுள்ளது. எனவே, ஆவின் நிறுவனத்தின் நஷ்டத்தை தவிர்ப்பதற்கு, புதிய முயற்சி எடுக்கப்பட உள்ளது.
![]()
|
அதன்படி, வர்த்தக ரீதியான பயன்பாட்டிற்காக 'டீ மேட்' என்ற பெயரில், ஒரு லிட்டர் பால் பாக்கெட் விற்பனைக்கு வரவுள்ளது. இது ஏற்கனவே, பயன்பாட்டில் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. தற்போது, மீண்டும் விற்பனைக்கு வரவுள்ளது. ஆரஞ்ச் நிற பால் பாக்கெட் விலையை விட, கூடுதல் விலையில் இது விற்பனை செய்யப்பட உள்ளது.