'அண்ணாமலையால் தூக்கமின்றி தவிக்கும் தி.மு.க., அமைச்சர்கள்'

Added : ஆக 22, 2022 | கருத்துகள் (93) | |
Advertisement
வடமதுரை : ''தமிழக பா.ஜ ., விற்கு கிடைத்திருக்கும் தலைவர் அண்ணாமலை எனும் வெப்ப சூறாவளியால் தி.மு.க., அமைச்சர்கள் துாக்கமின்றி தவிக்கின்றனர்,''என, பா.ஜ ., பட்டியல் அணி மாநில தலைவர் டி.பெரியசாமி பேசினார்.திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழ், தமிழ் என முழங்கும் தி.மு.க., தலைமையை சேர்ந்த குடும்பத்தினர் நடத்தும் பள்ளியின்
 தமிழக பாஜ. அண்ணாமலை, திமுக அமைச்சர்கள், TNBJP, Annamalai, DMKministers,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

வடமதுரை : ''தமிழக பா.ஜ ., விற்கு கிடைத்திருக்கும் தலைவர் அண்ணாமலை எனும் வெப்ப சூறாவளியால் தி.மு.க., அமைச்சர்கள் துாக்கமின்றி தவிக்கின்றனர்,''என, பா.ஜ ., பட்டியல் அணி மாநில தலைவர் டி.பெரியசாமி பேசினார்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரையில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: தமிழ், தமிழ் என முழங்கும் தி.மு.க., தலைமையை சேர்ந்த குடும்பத்தினர் நடத்தும் பள்ளியின் பெயர் ஆங்கிலத்தில் உள்ளது. மாநிலத்தில் அரசு பள்ளி தவிர எல்லா இடங்களிலும் ஹிந்தி படிக்க முடிகிறது. இதனால் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் மும்மொழி கற்றவர்களாகவும், மற்றவர்கள் இரு மொழி கற்றவர்களாக உள்ளதால் அவர்களின் அறிவு திறனில் பாகுபாடு, ஏற்றத்தாழ்வு உள்ளது.


latest tamil news


நரேந்திர மோடியின் ஆட்சியில் இந்தியா கடன் இல்லாத நாடாக மாறியுள்ளது. பா.ஜ.,வின் கொள்கை தேசமும், தெய்வீகமும் மட்டுமே. இது குடும்ப கட்சியில்லை. யார் வேண்டுமானாலும் தலைவராகவோ, கவர்னராகவோ, அமைச்சராகவோ வர முடியும். உழைப்பவர்களுக்கு முன்னுரிமை கிடைக்கும். தமிழகத்தில் வயிற்று பிழைப்பிற்காக கட்சி நடத்தும் சிலர் பட்டியல் இன மக்களை ஏமாற்றி திராவிடம், சமூக நீதி, ஹிந்தி திணிப்பு, சனதானம் என குழப்புகின்றனர்.அக்கட்சிகளில் இருப்போர் பா.ஜ.,வில் இணைய வேண்டும். அம்பேத்கர் புத்தகத்தில் ஒரே நாடு, ஒரே மொழி, நீர்மேலாண்மை, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ரூபாய் நோட்டு மாற்றுதல் போன்றவை குறிப்பிடப்பட்டுள்ளன. இவற்றை நடைமுறைப்படுத்தும் கட்சியாக பா.ஜ., உள்ளது. தமிழக பா.ஜ., விற்கு கிடைத்திருக்கிற தலைவர் அண்ணாமலை ஒரு வெப்ப சூறாவளி. அவர் அடுத்து என்ன ஊழல் பட்டியல் வெளியிடுவாரோ என தி.மு.க., அமைச்சர்கள் துாக்கமின்றி தவிக்கின்றனர், என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

வாசகர் கருத்து (93)

Nithila Vazhuthi - Coimbatore,இந்தியா
25-ஆக-202208:30:14 IST Report Abuse
Nithila Vazhuthi ஏன் திமுக அமைச்சகர்கள் தூங்கும் அறையில் இரவு நேரத்தில் அண்ணாமலை என்ன வேலையை பார்க்கிறார்?
Rate this:
RAMAKRISHNAN NATESAN - TEXAS ,DALLAS ,யூ.எஸ்.ஏ
27-ஆக-202209:10:06 IST Report Abuse
RAMAKRISHNAN NATESANகோட் சூட் போட்டுக்கிட்டு பாமரன் மாதிரி கேள்வி கேட்க அறிவாலய அடிமையால் மட்டுமே முடியும் ........
Rate this:
Cancel
bjp hater -  ( Posted via: Dinamalar Android App )
22-ஆக-202223:23:47 IST Report Abuse
bjp hater Enaku ivarae parthela siripu than varum aatu kutty annamalayum muttalavu thanni la boat la vantha annakatti thalaivarum ivar than kanadiga
Rate this:
Cancel
anburose - bangalore,இந்தியா
22-ஆக-202217:30:33 IST Report Abuse
anburose மோடி ஐயாவின் ஆட்சியால் கடன் இல்லாத நாடாகிவிட்டதா இந்தியா. ,
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X