திருத்தணி : ஆந்திராவில் இருந்து, ரயில் மற்றும் பேருந்தில் திருத்தணிக்கு கஞ்சா கடத்தி வந்த மூவரை, போலீசார் கைது செய்து, 36 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.ஆந்திரா மாநிலத்தி லிருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் வாயிலாக கஞ்சா கடத்தி வருவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து திருவள்ளூர் எஸ்.பி., சீபாஸ் கல்யாண் உத்தரவின்படி, தனிப்படை எஸ்.ஐ., குமார் தலைமையில் போலீசார், திருத்தணி ரயில் நிலையத்தில் நேற்று அதிகாலையில், ரோந்து பணியில் ஈடுபட்டனர்.அப்போது, ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா வில் இருந்து திருத்தணி ரயில் நிலையம் வந்த சென்னை எழும்பூர் செல்லும் காச்சி குடா விரைவு ரயிலில் ஏறி, எஸ்.ஐ., குமார் பயணி யரிடம் சோதனை நடத்தினார்.அப்போது, தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த பால கிருஷ்ணன், 29, என்பவர் வைத்திருந்த பையில் 16 கிலோ கஞ்சா இருந்ததை எடுத்து, அவரை கைது செய்தார்.
அதேபோல், காலை 7:00 மணிக்கு, ரேணிகுண்டா வில் இருந்து புதுச்சேரி நோக்கி செல்லும் பாஞ்சர் ரயிலிலும், எஸ்.ஐ., குமார்தலைமையிலான தனிப் படை போலீசார் பயணி யிடம் சோதனை நடத்தினர்.தேனி மாவட்டம், கம்பம் பகுதியைச் சேர்ந்த கண்ணன், 40, என்பவர் வைத்திருந்த பையில், 14 கிலோ கஞ்சா இருப்பதை கண்டுபிடித்து, அவரை கைது செய்தனர்.
திருத்தணி அடுத்த, தமிழக- - ஆந்திர எல்லை யான பொன்பாடி சோதனை சாவடியில், போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.திருப்பதியில் இருந்து திருத்தணி நோக்கி வந்த தனியார் பேருந்தில் நடந்த சோதனையில், சென்னை அண்ணா நகரைச் சேர்ந்த பாலகிருஷ்ணன், 56, என்பவர் பையில் வைத்தி ருந்த, 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, அவரை கைது செய்தனர்.