மும்பை : இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம், இன்று 2வது நாளாக கடும் வீழ்ச்சியை சந்தித்தன.
இன்றைய (ஆக.,22) வர்த்தக நேர துவக்கத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் சென்செக்ஸ் 352 புள்ளிகள் சரிந்து, 59,293 புள்ளிகளுடன், தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 114 புள்ளிகள் சரிந்து 17,644 புள்ளிகளுடன் துவங்கியது. அதானி ஸ்போர்ட்ஸ், ஹிந்துஸ்தான் யூனிலீவர் பங்குகள் உயர்வு கண்டன. விப்ரோ, கோடக் மஹிந்திரா வங்கி பங்குகள் சரிவு கண்டன.
எஃப்.எம்.சி.ஜி, பவர் சார்ந்த பங்குகளை தவிர அனைத்து பங்குகளும் சரிவை கண்டன. நண்பகல் 12 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 625 புள்ளிகளும், நிஃப்டி 187 புள்ளிகளும் சரிந்து வர்த்தகமாகி வருகிறது.
வீழ்ச்சிக்கு காரணம் என்ன ?
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கை அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை மேலும் உயர்த்த கூடுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதன் தாக்கம் உலக பங்குச்சந்தைகளை சரிவை ஏற்படுத்தி உள்ளது. மேலும் ஐரோப்பிய மற்றும் சீன பொருளாதார மந்தநிலை ஏற்பட கூடுமென அச்சம் காரணமாக, டாலரின் மதிப்பு கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.
![]()
|
டாலர் குறியீடு மதிப்பு 108 க்கு மேல் சென்றுள்ளது. மறுபுறம் 10 ஆண்டு அமெரிக்க பத்திரங்கள் 2.588 சதவீதத்திற்கு எதிராக 2.98 சதவீதமாக முதிர்வடைகிறது. இது சந்தைக்கு பாதகமான அம்சமாக பார்க்கப்படுகிறது.
இதனிடையே , மும்பை பங்குச்சந்தையின் மூலதனசந்தை மதிப்பு, தற்போதைய சரிவால், ரூ. 4.91 லட்சம் கோடி குறைந்து, ரூ.275.61 லட்சம் கோடியாக உள்ளது. ஆக.18ம் தேதி மூலதனசந்தை மதிப்பு ரூ.280.52 லட்சம் கோடியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.