வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
சென்னை: சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், 'இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம், காத்திருங்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தின் தலைநகராக திகழும் சென்னை உருவாக்கப்பட்ட ஆகஸ்ட் 22ம் தேதி, ஆண்டுதோறும் சென்னை தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை நகருக்கு இன்று (ஆக.,22) 383வது பிறந்த தினம். இதனையடுத்து சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை தினத்தை முன்னிட்டு முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: பிரிட்டிஷார் கட்டமைத்த மெட்ராஸை சென்னையாக்கியவர் கருணாநிதி. அதற்கு இன்று 383வது பிறந்தநாள். திராவிட மாடல் ஆட்சிக்காலத்தின் திட்டங்களுக்கு சென்னை ஒரு ரோல் மாடல். இப்போது நீங்கள் பார்க்கும் இந்த நவீனச் சென்னையை வடிவமைப்பதில், மேயராக இருந்த என் பங்களிப்பும் இருக்கிறது என்பதில் பெருமை. நீங்கள் எதிர்பார்க்கும் இன்னும் நிறைய சம்பவங்களை செய்யப் போகிறோம். காத்திருங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.