நடப்பு நிதியாண்டின் இறுதிக்குள் இந்தியாவின் சில்லறை பணவீக்கம் 6 சதவீதமாக குறையுமென நிபுணர்கள் கணித்துள்ளனர். மேலும், ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை 50 முதல் 60 அடிப்படை புள்ளிகள் உயர்த்த கூடுமெனவும் தெரிவித்துள்ளனர்.
பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக, மே மாதம் முதல் ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை, 1.40 சதவீதம் உயர்த்தி உள்ளது. தற்போது ரெபோ விகிதம் 5.40 சதவீதமாக உள்ளது. பணவீக்கம், உணவு பொருட்கள் விலை மாற்றத்தால் குறைந்தாலும், வெளிப்புற நிலையற்ற தன்மையால் ஆபத்தை எதிர்கொண்டு வருவதாக சமீபத்திய பணக்கொள்கை கூட்டத்தில் உறுப்பினர்கள் குறிப்பிட்டிருந்தனர்.
பார்கிளைஸ் இந்தியா, தலைமை பொருளாதார நிபுணர் ராகுல் பஜோரியா கூறுகையில், ரிசர்வ் வங்கி ரெபோ விகிதத்தை செப்டம்பர், டிசம்பர் முறையே இருமுறை 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்த கூடும். ரெபோ விகிதம் 5.90 சதவீதமாக உயரக்கூடும். எங்கள் பார்வையில், குறிப்பாக மழைக்கால சுழற்சிக்கு முன்னதாக, எரிபொருள் விலை நிலையற்றதாக இருக்கும் நிலையில், ரிசர்வ் வங்கி அதன் பணக்கொள்கை அணுகுமுறையில் திறம்பட எச்சரிக்கையாக உள்ளது.
![]()
|
சிலர் ரிசர்வ் வங்கி செப்டம்பர் பணக்கொள்கை கூட்டத்தின் முடிவில், 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்த கூடுமென கணித்துள்ளனர். ஐ.சி.எஃப்.சி பர்ஸ்ட் வங்கியின் பொருளாதார நிபுணர், கவுரா சென் குப்தா கூறுகையில், அமெரிக்க மத்திய வங்கி 75 அடிப்படை புள்ளிகள் வட்டி விகிதத்தை உயர்த்தினால், ரிசர்வ் வங்கியும் ஒரேயடியாக 50 அடிப்படை புள்ளிகள் உயர்த்த வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. என்றார்.
செப்டம்பர், டிசம்பரில் 35 மற்றும் 25 புள்ளிகள் முறையே, ரெபோ விகிதம் 6 சதவீதமாக இருக்குமென பிரபல நோமுரா தனது கணிப்பில் கூறியுள்ளது. 'வரும் காலத்தில் வட்டி விகிதம் உயர்வு இருக்குமென்பதை உறுதிப்படுத்தும் அதே வேளையில், ரெபோ விகித மாற்றம் வெகு தொலைவில் இல்லை' என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement