உங்கள் காரில் பேட்டரியை பராமரிப்பது எப்படி?

Updated : ஆக 22, 2022 | Added : ஆக 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
உங்கள் காரில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பாகம் பேட்டரி. செல்ஃப் மோட்டார் முதல், எச்சரிக்கை கருவிகள், விளக்குகள் வரை அனைத்து முக்கியமான பாகங்களை இயக்குவதற்கும் பேட்டரிதான் முக்கிய காரணம். கார் பேட்டரி நீடித்து உழைக்க பராமரிப்பது எப்படி? அதற்கு என்னென்னவெல்லாம் பரிசோதிக்க வேண்டும் ? என்பதை பற்றி பார்போம்...!பொதுவாக பைக்கில் பேட்டரி பராமரிக்காமல்
DinamalarDotcom, Special, Automobiles, Cars, Maintenance, Battery, தினமலர்டாட்காம், ஸ்பெஷல், ஆட்டோமொபைல், கார்கள், பராமரிப்பு, பேட்டரி

உங்கள் காரில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பாகம் பேட்டரி. செல்ஃப் மோட்டார் முதல், எச்சரிக்கை கருவிகள், விளக்குகள் வரை அனைத்து முக்கியமான பாகங்களை இயக்குவதற்கும் பேட்டரிதான் முக்கிய காரணம். கார் பேட்டரி நீடித்து உழைக்க பராமரிப்பது எப்படி? அதற்கு என்னென்னவெல்லாம் பரிசோதிக்க வேண்டும் ? என்பதை பற்றி பார்போம்...!

பொதுவாக பைக்கில் பேட்டரி பராமரிக்காமல் விட்டுவிட்டால் அவசரத்திற்கு கிக்கர் மூலம் ஸ்டார்ட் செய்து வாகனத்தை இயக்கிக்கொள்ளலாம், அதேசமயம் உங்கள் காரில் பேட்டரியை பராமரிக்காமல் விட்டுவிட்டால், ஸ்டார்ட் செய்ய அவதிப்படவேண்டும். இதனால் கார்களில் அவ்வபோது பேட்டரியின் நிலை குறித்து பரிசோதிக்கவேண்டும்.





பேட்டரியின் வாட்டர்



latest tamil news



முதலில் டிஸ்டில்டு வாட்டரை சரியான அளவில் பராமரித்தல் மிக அவசியம். டிஸ்டில்டு வாட்டரும் சாதரன தண்ணிரும் ஒன்றல்ல. எனவே டிஸ்டில்டு வாட்டரை மட்டும் பயன்படுத்துங்கள். சரியான வாட்டர் லெவல் பராமரித்தால் பேட்டரியின் ஆயுளை நீட்டிக்கலாம்.





ஆசிட் சோதனை



latest tamil news


Advertisement


பேட்டரியில் பயன்படுத்தப்பட்டுள்ள அமிலத்தை 2 முதல் 3 மாதங்களுக்கு ஒரு முறை சோதனை செய்யுங்கள். அமிலத்தின் ஸ்பெசிஃபிக் கிராவிட்டினை சோதிக்கவேண்டும். இதனால் உங்கள் கார் பேட்டரி நீடித்து உழைக்க வாய்ப்பு உள்ளது.




சுத்தமாக வைத்துகொள்ளுங்கள்



latest tamil news



பேட்டரின் இனைப்பு டெரிமினல்களை தூய்மையாக வைத்திருப்பது கார் வைத்திருப்போர் தெரிந்துகொள்ளக்கூடிய முக்கியமான ஒரு விஷயம் ஆகும். அவ்வபோது பருத்தி துணியை கொண்டு பேட்டரியில் படிந்திருக்கும் தூசி மற்றும் அழுக்குகளை கவனமாக துடைத்து சுத்தப்படுத்துங்கள். அதுமட்டுமல்லமல், கேபிளில் சில சமயம் பூஞ்சைகள் போன்று பூத்து போவதுண்டு. பிளாஸ்டிக் பிடிகொண்ட சிறிய கத்தியை கொண்டு அதனை சுத்தப்படுத்துங்கள். மசை அல்லது ஏதாவது ஒரு லூப்ரிகண்டை அதன் மீது தடவினால் மீண்டும் பூத்து போகாது.



தரமற்ற விளக்குகள் பயன்படுத்தாதீர்



latest tamil news



தரம் குறைவான, மறுவிற்பனை விளக்குகள், மற்றும் தேவையில்லாத அலங்கார விளக்குகள் பயன்படுத்தாதீர்கள். இந்த விளக்குகளால் அதிகப்படியான பேட்டரி சக்தி பாதிக்கும்.





இனைப்பை துண்டியுங்கள்



latest tamil news



ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் காரினை பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரி இனைப்பை நீக்கிவிடுங்கள். மீண்டும் பயன்படுத்தும் பொழுது முறையாக பரிசோதனை செய்து இனைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.




பெல்ட்




latest tamil news



பெல்ட் பேட்டரியை இறுக்கிப் பிடித்திருக்கும் பெல்ட் சரியாக இருக்கிறதா என்பதை சோதித்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால், கார் செல்லும்போது ஏற்படும் அலுங்கல், குலுங்கல்களில் பேட்டரியிலிருந்து ஆசிட் வெளியேறும் வாய்ப்பு இருக்கிறது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
23-ஆக-202209:13:14 IST Report Abuse
ஆனந்த் //இது தவறு // இன்றைய கார்கள் ப்ரோக்ராம் செய்யப்பட்டவை . பேட்டரியை துண்டித்தால் .. ஒரு வாரம் அல்லது சில நாட்கள் கழித்து ஸ்டார்ட் செய்வது மற்றும் ஓட்டுவது கஷ்டம்
Rate this:
Cancel
ஆனந்த் - நாகர்கோவில் ,இந்தியா
23-ஆக-202209:12:53 IST Report Abuse
ஆனந்த் ஒரு வாரம் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் காரினை பயன்படுத்தாமல் இருந்தால் பேட்டரி இனைப்பை நீக்கிவிடுங்கள். மீண்டும் பயன்படுத்தும் பொழுது முறையாக பரிசோதனை செய்து இனைப்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X