அர்ச்சகர் நியமன அரசு விதிகள் ஆகம கோவில்களுக்கு பொருந்தாது!

Updated : ஆக 23, 2022 | Added : ஆக 23, 2022 | கருத்துகள் (129) | |
Advertisement
சென்னை : 'அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம், அறங்காவலர் அல்லது தக்காருக்கு மட்டுமே உள்ளது; ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களுக்கு, அர்ச்சகர் நியமன விதிகள் பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அறநிலையத் துறை கோவில் ஊழியர்கள் பணி விதிகளை, 2020ல் தமிழக அரசு ஏற்படுத்தியது. அதில், கோவில்களில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களை
அர்ச்சகர் நியமனம்,  அரசு விதிகள்,  ஆகம கோவில்கள், சென்னை உயர் நீதிமன்றம் , Agama kovil, Chennai High Court,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphoneசென்னை : 'அர்ச்சகர் உள்ளிட்ட கோயில் ஊழியர்களை நியமிக்கும் அதிகாரம், அறங்காவலர் அல்லது தக்காருக்கு மட்டுமே உள்ளது; ஆகம விதிகளை பின்பற்றும் கோயில்களுக்கு, அர்ச்சகர் நியமன விதிகள் பொருந்தாது' என, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அறநிலையத் துறை கோவில் ஊழியர்கள் பணி விதிகளை, 2020ல் தமிழக அரசு ஏற்படுத்தியது. அதில், கோவில்களில் அர்ச்சகர் உள்ளிட்ட பணியாளர்களை நியமிக்க தகுதிகள் வரையறை செய்யப்பட்டன.குறிப்பிட்ட சில விதிகளை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில், அகில இந்திய ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்க பொதுச்செயலர் முத்துகுமார், சென்னையை சேர்ந்த டி.ஆர்.ரமேஷ் உள்ளிட்ட பலர் வழக்கு தொடர்ந்தனர்.ஆகம விதிகளை, சடங்குகளை புறக்கணித்து விதிகள் வகுக்கப்பட்டு இருப்பதாகவும், இதை பின்பற்றி, ஆகமப்படியான கோவில்களில் அர்ச்சகர்களை நியமிக்க முடியாது எனவும், மனுக்களில் கூறப்பட்டது.இம்மனுக்கள், தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி என்.மாலா அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன் விசாரணைக்கு வந்தன. ஆதி சைவ சிவாச்சாரியார்கள் சேவா சங்கம் சார்பில், வழக்கறிஞர் பி.வள்ளியப்பன்; மற்றவர்கள் சார்பில், மூத்த வழக்கறிஞர் சதீஷ் பராசரன், வழக்கறிஞர்கள் ஆர்.பார்த்தசாரதி, என்.ஆர்.வெங்கடேஷ், பி.ஜெகநாத் ஆகியோரும்; அரசு தரப்பில், அட்வகேட் ஜெனரல் ஆர்.சண்முகசுந்தரம், சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆகியோரும் ஆஜராகினர்.latest tamil news


மனுக்களை விசாரித்த முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:கடந்த 2020ல் ஏற்படுத்திய விதிகளில், அறங்காவலர் மட்டுமின்றி தக்காரும், நியமன அதிகாரியாக வரையறுக்கப் பட்டுள்ளது. அறநிலையத் துறை சட்டப்படி, அறங்காவலர்கள் இல்லாதபோது, தக்கார் நியமிக்கப்படுகின்றனர்.அர்ச்சகர் நியமனங்களை மேற்கொள்ள, அறங்காவலர்களுக்கு தான் உரிமை உள்ளது என்பதில், எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், அறங்காவலர்கள் இல்லாதபோது, கோவில் செயல்பாடுகளை ஒருவர் கவனிக்க வேண்டும்.எனவே, அவர்களின் அதிகாரங்களைச் செயல்படுத்த, தக்கார் நியமிக்கப்படுகிறார். அதனால், நியமன அதிகாரியாக விதிகளில் குறிப்பிடப்பட்டவர்களை, சட்டத்துக்கு எதிரானதாக கூற முடியாது.அதேநேரம், காலவரையின்றி தக்கார் நீடிக்கக் கூடாது. விரைவில் அறங்காவலர்களை நியமிக்க வேண்டும். அப்போதுதான், கோவில் நிர்வாகம், அறங்காவலர்கள் வசம் இருக்கும்.அர்ச்சகர் நியமனங்களுக்கு தகுதி, வயது, 7 மற்றும் 9 வது விதிகளில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.ஓராண்டு சான்றிதழ் வகுப்பு அர்ச்சகர் பணிக்கு தகுதியாகவும்; பல ஆண்டுகள் பூஜை செய்வதில் அனுபவம் இருந்தாலும், உரிய தகுதி இல்லை என்றால், அவர்களை நியமிக்க முடியாது எனவும் விதிகளில் கூறப்பட்டுள்ளது.இந்த விதிகளை சட்டவிரோதமானது எனக் கூற முடியாது. ஏனென்றால், இந்த விதிகள் அர்ச்சகர்களுக்கு மட்டுமின்றி, இதர பணியிடங்களுக்கும் பொருந்தும்.எனவே, இந்த இரண்டு விதிகளையும் ரத்து செய்தால், அர்ச்சகர் தவிர்த்து, மற்ற பணிகளுக்கான நியமனங்களில், வழிகாட்டுதல்கள் இல்லாமல் போய் விடும்.அதேநேரம், ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு, இந்த விதிகள் பொருந்தாது.ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களில் அர்ச்சகர்கள் நியமனங்களை பொறுத்தவரை, ஆதி சைவ சிவாச்சாரியார்கள் நல சங்கம் மற்றும் சேஷம்மாள் வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை தான் அமல்படுத்த வேண்டும்.எனவே, ஆகம விதிகளின்படியான கோவில்களுக்கு, ஆகமப்படி தான் அர்ச்சகர்களை நியமிக்க முடியும். அறங்காவலர்கள் அல்லது தக்கார் தான் அர்ச்சகரை நியமிக்க முடியும்; அறநிலையத் துறை அல்ல. ஆகமப்படி அர்ச்சகர் நியமிக்கப்படவில்லை என்றால், தனிநபர் அதை எதிர்த்து வழக்கு தொடரலாம்.ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களை அடையாளம் காண வேண்டியதுள்ளது.எந்த ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது என்பதையும் பார்க்க வேண்டும்.எனவே, ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.சொக்கலிங்கம் தலைமையில் ஐவர் குழுவை நியமிக்க, அரசுக்கு உத்தரவிடப்படுகிறது. குழுவில், சென்னை சமஸ்கிருத கல்லுாரி நிர்வாக குழு தலைவர் என்.கோபாலசாமி இடம்பெற வேண்டும்.தலைவரின் ஆலோசனையுடன், ஒரு மாதத்துக்குள், இரு உறுப்பினர்களை அரசு நியமிக்க வேண்டும்.அலுவல்சாரா உறுப்பினராக அறநிலையத் துறை கமிஷனர் இருக்க வேண்டும்.இந்த வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு, ஆகம விதிகளின்படி கட்டப்பட்ட கோவில்களுக்கு மட்டுமே பொருந்தும்; மற்ற கோவில்களுக்கு அல்ல.ஆகம விதிகளின்படி கட்டப்பட்டுள்ளதா; எந்த ஆகமப்படி கட்டப்பட்டுள்ளது என்பதை, ஐவர் குழு அடையாளம் காணும். அந்த ஆகமப்படி, அர்ச்சகர் நியமனம் இருக்க வேண்டும்; விதி 7 மற்றும் 9ன்படி அல்ல.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (129)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rafi - Riyadh,சவுதி அரேபியா
23-ஆக-202217:35:23 IST Report Abuse
Rafi .....
Rate this:
Cancel
Yaro Oruvan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
23-ஆக-202217:26:56 IST Report Abuse
Yaro Oruvan என்ன இங்குட்டு போனாலும் கேட் போடுறாங்க.. கடல வேவாது போலருக்கு
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
23-ஆக-202217:25:14 IST Report Abuse
sankaseshan To become an archaka is not easy . 12 years are required to complete he courses. Even then success is not certain. Short courses of 1or 2 years duration is nonsense. Dedication is very important. Archakas are also taught. How to do a abishekam decorate idols with vasthiram ,adorn with jewelry. Such Dedication cannot be expected from shot coursesers .the idea of government is to do away with sanathan dharma and destroy. At the same time they are not against it .
Rate this:
Suri - Chennai,இந்தியா
23-ஆக-202220:45:17 IST Report Abuse
Suri...........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X