'இயர்போனால்' எக்கச்சக்க தீமை: நரம்பியல் டாக்டர்கள் எச்சரிக்கை

Updated : ஆக 23, 2022 | Added : ஆக 23, 2022 | கருத்துகள் (8) | |
Advertisement
கோவை: இன்றைய காலத்தில் மொபைல்போனுடன், இயர்போனையும் கையில் வைத்துக்கொண்டு சுற்றுவதை, பேஷன் ஆகவும் ஸ்டைல் ஆகவும் நினைக்கின்றனர் பலர். ஆனால், அளவுக்கு மீறிய இது போன்ற செயல்களால், மூளை நரம்புகள் பாதிக்கப்படும்; நாளடைவில் மூளைக்கே பாதிப்பு ஏற்படும் என, நரம்பியல் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.இன்று இளவயதினர் பலர் வாகனங்கள் ஓட்டும் போது கூட, காதில் இயர்போனை

கோவை: இன்றைய காலத்தில் மொபைல்போனுடன், இயர்போனையும் கையில் வைத்துக்கொண்டு சுற்றுவதை, பேஷன் ஆகவும் ஸ்டைல் ஆகவும் நினைக்கின்றனர் பலர். ஆனால், அளவுக்கு மீறிய இது போன்ற செயல்களால், மூளை நரம்புகள் பாதிக்கப்படும்; நாளடைவில் மூளைக்கே பாதிப்பு ஏற்படும் என, நரம்பியல் டாக்டர்கள் எச்சரிக்கின்றனர்.latest tamil news
இன்று இளவயதினர் பலர் வாகனங்கள் ஓட்டும் போது கூட, காதில் இயர்போனை மாட்டிக்கொண்டு பயணிப்பதால், விபத்துகள் அதிகம் ஏற்படுகிறது.இவர்களின் வசதிக்கு ஏற்ப, விதம் விதமான ஹெட்போன்கள் சந்தையில் அறிமுகமாகியுள்ளன. 'இயர்போன்', ப்ளூடூத் ஹெட்போன், 'இயர் பட்ஸ்' என, மூன்று வகைகளில் இயர்போன்களை விற்பனை செய்து வருகின்றனர்.

இயர்போனில் இவர்கள் பேசுவதை பார்த்து, 'பாவம்...சின்ன வயசுலயே இப்படி தன்னால பேசிக்கிட்டிருக்கானே' என பரிதாபப்படுகின்றனர் சீனியர் சிட்டிசன்கள்.இயர்போனை பயன்படுத்தும் போது, காதினுள் புகும் சத்தம் வழக்கமான சத்தத்தை விட, அதிகமாக இருக்கும். அதிக நாட்களுக்கு, 90 டெசிபலுக்கு அதிகமான சத்தம் கேட்கும் போது, காது கேளாமை பிரச்னை ஏற்படுகிறது. நீண்ட நாளாக இயர் போன்களை பயன்படுத்தினால், மூளை நரம்புகளில் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கின்றனர் டாக்டர்கள்.

நீண்ட நேரம் இயர்போன் பயன்படுத்துவதால், முதலில் காதின் வெளிப்புறத்தில் வலி ஏற்படும். இயர்போனுக்கு அடிமையாகி இருப்பவர்களின் காது, அதன் இயல்பான உணர்வுத்தன்மை குறைந்து, மரத்துப்போகும் நிலைக்கு தள்ளப்படும். நாளடைவில் கேட்கும் தன்மையை இழந்து விடுகின்றனர். இதுமட்டுமன்றி, இயர்போனின் மின்காந்த அலைகளினால், மூளை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. சில நேரங்களில் நரம்பு சார்ந்த பிரச்னை ஏற்பட்டு, பழைய நினைவுகள் எதுவுமின்றி பாதிப்பிற்கு உள்ளாவர் என்கின்றனர் நரம்பியல் டாக்டர்கள்.

சர்வம் காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை மையத்தின் டாக்டர் அரவிந்தன் கூறுகையில், ''நீண்ட நாட்களாக இயர்போன் பயன்படுத்தி வந்தால் அதிக காதினுள் இரைச்சல், தலைவலி, அதிக கோபம், நடத்தையில் மாற்றம், இறுதியாக காது கேளாமை பிரச்னை ஏற்படுகிறது. இயர்போன் பயன்படுத்துவதால், காதில் கிருமி பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த வரை மொபைல்போன் 'ஸ்பீக்கர் ஆன்' செய்து, போன் பேசுவது நல்லது. போதுமான வரை இயர்போனை பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். காதில் ஏதேனும் பிரச்னை ஏற்பட்டால், உடனடியாக மருத்துவர்களை அணுக வேண்டும். சுயமாக மருந்துகளை உட்கொள்ளக்கூடாது,'' என்றார்.


latest tamil news
பிரபல நரம்பியல் நிபுணர் மணிவாசகன் கூறுகையில், ''மனிதனுடைய காதின் 'இயர்டிரம்' உள்ளே, மிகவும் மென்மையான நரம்புகளை கொண்டுள்ளது. அள வுக்கு அதிகமாக இயர்போன் பயன்படுத்தும் போது, அதிக அழுத்தம் காரணமாக முதலில் காதின் வெளிப்புறத்தில் வலி ஏற்படும். தொடர்ந்து பயன்படுத்தும்போது, காதின் உட்புற பாகங்களிலும் அதிர்வும், இரைச்சலும், வலியும் ஏற்படும். இயர்போனை கழற்றாமல் தொடர்ந்து பயன்படுத்தினால், அதிக டெசிபல் சத்தம் உள்ளே செல்கிறது. இதனால் காது கேட்காமல் போகும் வாய்ப்புகள் அதிகம்.
இயர்போனின் மின்காந்த அலைகளால் மூளை நரம்புகள் பாதிக்கப்படும். உடலில் காயம் ஏற்பட்டால், அங்கு மீண்டும் செல்கள் உயிர்பெற்று அந்த இடம் சரியாகி விடும். ஆனால், காதின் உள்பகுதிகளில் உள்ள நரம்புச்செல்கள் இறந்துவிட்டால், அவை மீண்டும் உருவாவதில்லை. ஆகையால், காது பகுதியை பாதுகாப்பாக பார்த்துக் கொள்ள வேண்டும்,'' என்றார். டாக்டர்கள் சொல்வது 'கேட்கிறதா' இளைஞர்களே!


'மூளைக்கு பாதிப்பு''காதில் உள்ள 'இயர்டிரம்' மிகவும் மென்மையானது. இந்த நரம்புகள், மூளையின் நேரடி தொடர்பில் உள்ளவை. நரம்புகளுக்கு தொடர்ந்து அழுத்தம், உயர் அதிர்வெண்களை கொடுத்தால், மூளைக்கு பாதிப்பு ஏற்படலாம். நாளொன்றுக்கு, 10 மணி நேரத்திற்கு மேல் இயர்போன் பயன்படுத்தும் நபர்களுக்கு, இது போன்ற பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. மனஅழுத்தம் இருந்தாலும், மூளை நரம்பில் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளது' என்கின்றனர் நரம்பியல் டாக்டர்கள்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
23-ஆக-202220:19:13 IST Report Abuse
அப்புசாமி இயர் ஃபோனால் ear போகும். ear போனால் டமாரம் தான். செல்வத்துள் செல்வம் செவிச்செல்வம். ஃபோன் போனா பரவாயில்லை. ear போனா வராது.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
23-ஆக-202213:51:56 IST Report Abuse
Kasimani Baskaran மிக அதிக சத்தமாக வைக்கக்கூடாது. சிலருக்கு இயர் போனிலுள்ள இரப்பரால் அலர்ஜி வரலாம். அலர்ஜி வந்தால் வேறு வித மூலப்பொருள்களை வைத்து செய்த இயர் போன போமை உபயோகிக்கவும்...
Rate this:
Cancel
23-ஆக-202212:43:26 IST Report Abuse
அருணா Earsஐ விட Ear phone ஆமுக்கியம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X