திமுக மட்டுமே அறிவார்ந்த கட்சியா?: உச்சநீதிமன்றம் காட்டம்

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 23, 2022 | கருத்துகள் (175) | |
Advertisement
புதுடில்லி : '' தி.மு.க., மட்டும் அறிவார்ந்த கட்சி என கருத வேண்டாம்'' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தி.மு.க., தரப்பு
இலவசம், உச்சநீதிமன்றம், திமுக, freebies, supreme court, sc, dmk,  சுப்ரீம் கோர்ட்,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone

புதுடில்லி : '' தி.மு.க., மட்டும் அறிவார்ந்த கட்சி என கருத வேண்டாம்'' என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா கூறியுள்ளார்.

தேர்தல்களின் போது இலவசங்கள் தருவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்படி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி, தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தி.மு.க., தரப்பு வழக்கறிஞர் வில்சன் தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டதாவது:


இந்த மனு, அரசியல் நோக்கத்துடன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுவை தாக்கல் செய்தவர், பஞ்சாப் சட்டசபை தேர்தலில் தோற்ற கட்சியைச் சேர்ந்தவர். சமூகத்தில் அடித்தட்டில் இருப்பவர்களின் முன்னேற்றத்துக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை, இலவசங்கள் என கருத முடியாது. எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறப்பட்டிருந்தது.latest tamil news


இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது உச்சநீதிமன்றம் கூறியதாவது:

எது இலவசம், எது நலத்திட்டம் என்பதில் வரையறை தேவை. இலவசம் வழங்குவது என்பது முக்கியமான பிரச்னை. இது குறித்த விவாதம் தேவை. நாட்டின் நலனுக்காக இந்த பிரச்னை கேட்கிறோம். புரிந்து கொள்ளுங்கள்.


இலவசங்கள் தொடர்பான விவகாரம் மிகவும் சிக்கலான பிரச்னை. தேர்தல் வாக்குறுதியோடு மட்டும் பார்க்காமல் மற்ற முக்கியமான விஷயங்கள் குறித்தும் பார்க்க வேண்டும். கிராமப்புற மாணவிகளுக்கு சைக்கிள் தருவது அவர்கள் கல்வி கற்று நன்மை அடையவே. மிகவும் பிற்படுத்தப்பட்ட கிராமத்துக்கு கால்நடைகள் வழங்குவது வாழ்வாதாரத்தை முன்னேற்றும். கிராமப்புறங்களில் வறுமையில் வாடுபவர்களுக்கு இலவசங்கள் மிக முக்கியமானதாக உள்ளது. இது போன்ற திட்டங்களை கண்மூடித்தனமான இலவசங்கள் எனக்கூறவில்லை.ஆட்சிக்கு வருவதற்கு முன் மாநிலத்தின் பொருளாதார நிலையை எவ்வாறு ஒரு கட்சி அறிந்திருக்கும்? இந்த விவகாரத்தில் தேர்தல் இலவசம் என்பதை அனைத்து தரப்பும் ஒரு பிரச்னையாக கருதுகிறீர்கள். ஆனால், தேர்தல் இலவசத்தை தாண்டி அரசின் கொள்கை முடிவு, திட்டங்கள் என்ற பெயரில் இலவசங்கள் அறிவிக்கப்படுகிறது. அதுவும் கவனிக்கப்பட வேண்டியது, சரிபடுத்தப்பட வேண்டியது ஆகும். இங்கு அனைத்து தரப்பினரும் தேர்தல் இலவசம் கட்டுப்படுத்த வேண்டும் என்பது தொடர்பாக வாதிடுகிறீர்கள். நாங்கள் மொத்தமாக இலவசம் அறிவிப்பு தொடர்பாக கட்டுப்பாடு வேண்டும் என நினைக்கிறோம் என தெரிவித்தது.தொடர்ந்து திமுக வழக்கறிஞர் வில்சனிடம் தலைமை நீதிபதி கூறுகையில், உங்கள் கட்சி மற்றும் அமைச்சர் பேசுவதை கவனித்து கொண்டுதான் இருக்கிறோம். நாங்கள் எதுவும் சொல்லவில்லை என்பதற்காக கண்ணை மூடிக்கொண்டு இருக்கிறோம் என்று எண்ணி விடாதீர்கள்-. திமுக மட்டும் தான் சாதுரியமான, புத்திசாலித்தனமான கட்சி என நினைக்க வேண்டாம். பல விவகாரங்கள் குறித்து பேசாமல் இருப்பதால் அதை அறியாமல் இல்லை என நினைக்க வேண்டாம் என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (175)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
periasamy - KARAIKUDI,இந்தியா
28-ஆக-202213:57:22 IST Report Abuse
periasamy சட்டப்படி என்ன உள்ளதோ அதை மீறும் பட்சத்தில் நீதிமன்றம் கேள்வி கேட்கலாம், இங்கே புதிய சட்டத்தை உருவாக்கவோ திருத்தவோ முடியாத நீதி மன்றம் தலையிட தேவையில்லை இதும் சும்மா சாளர ஜிங் ஜ அடிக்கிற வேலை
Rate this:
Cancel
rameshkumar natarajan - kochi,இந்தியா
25-ஆக-202210:08:27 IST Report Abuse
rameshkumar natarajan Any agency in democracy should function based on the constitution only. On basis, SC is asking questions on freebies . In democracy, people's mandate is ultimate. If people think, someone is not functioning properly, they will be thrown out, as it was done in many states. So, leave these issues to people's mandate...
Rate this:
Cancel
24-ஆக-202209:49:33 IST Report Abuse
அப்புசாமி தேர்தலில் வென்று ஆட்சியில் அமருமெந்தக் கட்சியும் அறிவார்ந்த கட்சிதான். இத்தனை கோடி மக்களை ஏமாத்தி ஆட்சியைப் புடிக்கறதுன்னா சும்மாவா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X