வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கோவை: சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்கப்படும். வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் மாற்றமில்லை என்று மின்சாரதுறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மின்கட்டண உயர்வு குறித்து, அமைச்சர் செந்தில் பாலாஜி கோவையில் செய்தியாளர்க்கு அளித்த பேட்டி: சிறு, குறு நிறுவனங்களுக்கான மின்கட்டண உயர்வு குறைப்பது பற்றி மட்டுமே பரிசீலிக்கப்படும். மின் கட்டண உயர்வு குறித்து பல்வேறு நிறுவனங்களிடம் பரிசீலிக்கப்பட்டது.

உயர்த்தப்பட்ட மின் கட்டணங்களை குறைக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர் அது விரைவில் பரிசீலிக்கப்படும். வீடுகளுக்கு திட்டமிடப்பட்டுள்ள மின் கட்டண உயர்வில் மாற்றமில்லை. மற்ற மின் கட்டண உயர்வில் எவ்விதமான மாற்றமும் இல்லை என மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்