அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

Added : ஆக 23, 2022 | |
Advertisement
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் பழுதடைந்த உபகரணங்கள் தொடர்பாக எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி சந்தையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இட்லி அவிக்கும் ஸ்டீமர் கருவி பழுதடைந்தது. இதனால் சரியான நேரத்தில் தேவையான அளவிற்கு இட்லி வேகவைக்க முடியாமல் பணியாளர்கள் அவதிப்பட்டனர். மேலும், உணவகத்தில் உள்ள மின் விசிறிகள், தண்ணீர்
அம்மா உணவகத்தில் எம்.எல்.ஏ., ஆய்வு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அம்மா உணவகத்தில் பழுதடைந்த உபகரணங்கள் தொடர்பாக எம்.எல்.ஏ., ஆய்வு செய்தார்.

கள்ளக்குறிச்சி நகராட்சி காய்கறி சந்தையில் இயங்கி வரும் அம்மா உணவகத்தில் இட்லி அவிக்கும் ஸ்டீமர் கருவி பழுதடைந்தது. இதனால் சரியான நேரத்தில் தேவையான அளவிற்கு இட்லி வேகவைக்க முடியாமல் பணியாளர்கள் அவதிப்பட்டனர். மேலும், உணவகத்தில் உள்ள மின் விசிறிகள், தண்ணீர் குழாய்களும் பழுதடைந்தன.இது தொடர்பாக புகார் எழுந்ததையடுத்து செந்தில்குமார் எம்.எல்.ஏ., நேற்று அம்மா உணவகத்தில் ஆய்வு செய்தார். பழுதடைந்த உபகரணங்களை சீரமைக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் உணவகத்தில் உணவு சாப்பிட்டவர், உணவகத்திற்கு முன்பாக வழியை அடைத்தபடி நிறுத்தப்படும் வாகனங்களை அங்கிருந்து அகற்றிட நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.ஆய்வின்போது, கவுன்சிலர்கள் சத்யா குட்டி, முருகன், ஜெயராமன், அ.தி.மு.க., மாநில பொதுக்குழு உறுப்பினர் சேகர், மாவட்ட நிர்வாகி ரமேஷ், நகர பொருளாளர் சக்திவேல், நிர்வாகிகள் கோபி, ஜானி, மோகன் உடனிருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X