வாய்க்கால் கரையில் குப்பை; மாசடையும் அபாயம்

Added : ஆக 23, 2022 | |
Advertisement
பராமரிப்பில்லாத நிழற்கூரைஉடுமலை, காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதை பயணியர் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே இந்த நிழற்கூரை புதுப்பிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜன், உடுமலை.பூங்காவை புதுப்பிக்கணும்உடுமலை ஸ்ரீ நகர் நகராட்சி பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், இப்பூங்கா
வாய்க்கால் கரையில் குப்பை; மாசடையும் அபாயம்

பராமரிப்பில்லாத நிழற்கூரை

உடுமலை, காந்திநகர் பஸ் ஸ்டாப் நிழற்கூரை பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதை பயணியர் பயன்படுத்த தயக்கம் காட்டுகின்றனர். எனவே இந்த நிழற்கூரை புதுப்பிக்க நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராஜன், உடுமலை.

பூங்காவை புதுப்பிக்கணும்
உடுமலை ஸ்ரீ நகர் நகராட்சி பூங்காவில், விளையாட்டு உபகரணங்கள் பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால், இப்பூங்கா பொலிவிழந்து உள்ளது. இங்கு வரும் குழந்தைகள், மக்கள் ஏமாற்றமடைகின்றனர். எனவே, இப்பூங்காவை நகராட்சியினர் பராமரிக்க வேண்டும்.- செல்வம், உடுமலை.

ரோட்டில் பள்ளம்
உடுமலை கச்சேரி வீதியில், கற்கள் பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால், வாகன ஓட்டுனர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த ரோட்டை சீரமைக்க நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- சிவராஜன், உடுமலை.

புதர்களை அகற்றணும்
உடுமலை ரயில்வே ஸ்டேஷன் பின்புறம், முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்படுகிறது. இதனால், இரவு நேரங்களில் விஷஜந்துகள் ஜாலியாக உலா வருகின்றன. அப்பகுதி மக்களும் அச்சமடைந்துள்ளனர். எனவே இந்த முட்செடிகளை ரயில்வே துறையினர் அகற்ற வேண்டும்.- சதாசிவம், உடுமலை.

கழிவுகளால் அவதி
தேசிய நெடுஞ்சாலையில், மடத்துக்குளம் அமராவதி ஆற்றுப்பாலம் முன், குப்பை, இறைச்சிக்கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுனர்கள், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.- சேகர், உடுமலை.

உடை மாற்றும் அறை சேதம்
திருமூர்த்திமலை பஞ்சலிங்கம் அருவிக்கு, தினமும் ஏராளமான சுற்றுலா பயணியர் வருகின்றனர். அருவியில், பெண்கள் உடை மாற்றும் அறை சேதமடைந்துள்ளதால், அதை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. அதை வனத்துறையினர் சீரமைக்க வேண்டும்.- சாந்தி, உடுமலை.

குப்பைக்கு தீவைப்பு
உடுமலையில், முக்கிய வீதிகளில் குப்பைக்கு சிலர் தீ வைக்கின்றனர். இதனால், புகைமண்டலம் உருவாகி மக்கள் பாதிக்கப்படுகின்றனர். சுற்றுச்சூழலும் பாதிக்கப்படுகிறது. குப்பைக்கு தீ வைப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ரமேஷ், உடுமலை.

கூடுதல் ரேக்குகள் தேவை
உடுமலை பஸ் ஸ்டாண்டில், பஸ்கள் நிறுத்த போதுமான ரேக்குகள் இல்லை. இதனால், பொதுமக்கள் நிற்கும் இடத்தில் பஸ்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால், மக்களுக்கு இடையூறு ஏற்படுவதோடு, நெரிசலும் ஏற்படுகிறது. அங்கு கூடுதல் ரேக்குகள் அமைக்க வேண்டும்.- முருகன், உடுமலை.

ரவுண்டானா வேண்டும்
உடுமலை- பொள்ளாச்சி ரோட்டில் முக்கோணம் பஸ் நிறுத்தம் மூன்று ரோடுகளின் சந்திப்பாகஉள்ளது. அதனால், அங்கு போக்குவரத்து அதிகளவில் இருக்கும். வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், அங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- ராமசாமி, உடுமலை.

வாய்க்காலில் குப்பை
உடுமலை மலையாண்டிபட்டணம் கண்ணமநாயக்கனுார் பி.ஏ.பி., வாய்க்கால் கரையில் 'குடி'மகன்கள் குடித்து விட்டு மதுபாட்டில்களை வீசிச்செல்கின்றனர். குப்பையும், பிளாஸ்டிக்கும் வீசப்படுகின்றன. இதனால் வாய்க்கால் மாசடையும் வாய்ப்புள்ளது. இதை பொதுப்பணித்துறை அதிகாரிகள் தடுக்க வேண்டும்.- ரமணன், மலையாண்டிக்கவுண்டனுார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X