சிறப்பு பகுதிகள்

டீ கடை பெஞ்ச்

முதல்வர் ஸ்டாலின் மீது அமைச்சர் வருத்தம்!

Added : ஆக 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
முதல்வர் ஸ்டாலின் மீது அமைச்சர் வருத்தம்!''சொந்தக்காரர் பெயர்ல 'டெண்டர்' எடுக்கலாமோ...'' எனக் கேட்டபடியே வந்தார், குப்பண்ணா.''ரொம்ப தப்பாச்சே... எந்தத் துறையில வே இந்தக் கூத்து...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.''சென்னை பி.எஸ்.என்.எல்., வட்டத்துல மண்டல அதிகாரியா இருந்தவர், தன் சொந்தக்காரர் பெயர்ல, 'பைபர் நெட்' நிறுவனம் நடத்தறார்... இது சம்பந்தமா, சில ஒப்பந்த

டீக்கடை பெஞ்ச்


முதல்வர் ஸ்டாலின் மீது அமைச்சர் வருத்தம்!''சொந்தக்காரர் பெயர்ல 'டெண்டர்' எடுக்கலாமோ...'' எனக் கேட்டபடியே வந்தார், குப்பண்ணா.

''ரொம்ப தப்பாச்சே... எந்தத் துறையில வே இந்தக் கூத்து...'' எனக் கேட்டார், அண்ணாச்சி.

''சென்னை பி.எஸ்.என்.எல்., வட்டத்துல மண்டல அதிகாரியா இருந்தவர், தன் சொந்தக்காரர் பெயர்ல, 'பைபர் நெட்' நிறுவனம் நடத்தறார்... இது சம்பந்தமா, சில ஒப்பந்த நிறுவனங்கள் சார்புல, தலைமை பொது மேலாளருக்கு புகார்கள் போனது ஓய்...

''அதுல, 'அதிகாரியின் உறவினர் நிறுவனத்துக்கு மட்டுமே அதிக இணைப்புகள் வழங்க அனுமதி தரா... மற்ற ஒப்பந்ததாரர்களுக்கு பைபர் நெட் இணைப்பு வழங்க அனுமதி தரது இல்லை... இதனால, எங்க வாழ்வாதாரம் பாதிக்கப்படறது'ன்னு குமுறி தள்ளியிருந்தா ஓய்...

''விசாரணையில, புகார் உண்மைதான்னு தெரியவந்தது... உடனே, மண்டல அதிகாரியை கேபிள் திட்டமிடுதல் பிரிவுக்கு துாக்கி அடிச்சுட்டா... உறவினரின் ஒப்பந்த நிறுவனம் மீதும் சீக்கிரமே நடவடிக்கை வரும்கறா ஓய்...'' என்றார், குப்பண்ணா.

''விஜயகுமார், இந்த பேப்பரை அங்க வையுங்க...'' என்ற அன்வர்பாயே, ''கட்சியில இருந்து நீக்கப்பட்டவருக்கு பதவியான்னு புலம்புறாங்க பா...'' என, அடுத்த மேட்டருக்கு நகர்ந்தார்.

''எந்தக் கட்சி விவகாரம் ஓய்...'' எனக் கேட்டார், குப்பண்ணா.

''சென்னை மாவட்ட தி.மு.க., உட்கட்சி தேர்தல்ல, பதவிக்காக மாவட்டச் செயலர்கள் பரிந்துரைக்கிறவங்க மேல ஏகப்பட்ட புகார்கள் அறிவாலயத்துல குவியுது... சில செயலர்கள், புகார் குடுத்தவங்களை பிடிச்சு பணம், பரிசு பொருட்களை குடுத்து, புகாரை வாபஸ் வாங்க வைக்கிறாங்க பா...

''உதாரணமா, 141வது வட்டச் செயலர் பதவிக்கு உதயசூரியன்னு ஒருத்தரை, மாவட்ட பொறுப்பாளர் வேலு பரிந்துரை செஞ்சி ருக்காரு... ஆனா, கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டைன்னு பல புகார்களால, அவரை கட்சியை விட்டுஏற்கனவே ஸ்டாலின் நீக்கியிருந்தாரு பா...

''அப்புறமா, உதயநிதியை பிடிச்சு சமீபத்துல தான் கட்சிக்குள்ள வந்தாரு... வந்த வேகத்துல, அவருக்கு பதவி வழங்க, மாவட்ட பொறுப்பாளர் பரிந்துரை செஞ்சிருக்கிறது, கட்சிக்குள்ள அதிருப்தியை ஏற்படுத்தி இருக்குது பா...'' என்றார், அன்வர்பாய்.

''முதல்வர் மேல அமைச்சர் வருத்தத்துல இருக்காருங்க...'' என்ற அந்தோணிசாமியே தொடர்ந்தார்...

''சுதந்திர தின விழாவுல முதல்வர் ஸ்டாலின், 'அரசு ஊழியர்களுக்கு ஜூலை 1 முதல் 3 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படும்'னு அறிவிச்சாரே... இது சம்பந்தமா, நிதி அமைச்சர் தியாகராஜனிடம் முதல்வர் ஆலோசனை நடத்தலைங்க...

''முதல்வர் அலுவலக அதிகாரிகள் எழுதி தந்ததை, முதல்வரும் அறிவிச்சிட்டாருங்க... இதனால, தியாகராஜன், 'அப்செட்'லஇருக்காருங்க...

''இதுக்கு மத்தியில, இந்த அறிவிப்புக்காக முதல்வரை பார்த்து, 'ஜாக்டோ - ஜியோ' உட்பட பல்வேறு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் நன்றி சொன்னாங்க...

''ஆனா, 'அகவிலைப்படி உயர்வை ஜன., 1ம் தேதியிட்டு வழங்காம, ஜூலை 1ல இருந்து தர்றதுக்கு நன்றி சொல்றது நியாயமா'ன்னு சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் மீது பாய்ஞ்சிருக்காங்க...

''அவங்களோ, 'நாங்க நன்றி சொல்லிட்டு, அது சம்பந்தமாகவும் முதல்வரிடம் கோரிக்கை வச்சோம்... ஆனா, நன்றி சொன்னதை மட்டும் செய்தியா குடுத்துட்டாங்க'ன்னு சமாதானம் சொல்லிட்டு இருக்காங்க...'' என முடித்தார், அந்தோணிசாமி.பெரியவர்கள் கிளம்ப, பெஞ்ச் அமைதியானது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
24-ஆக-202211:01:11 IST Report Abuse
Anantharaman Srinivasan கட்சியை விட்டுஏற்கனவே ஸ்டாலின் நீக்கியிருந்தாரு. ''அப்புறமா, உதயநிதியை பிடிச்சு சமீபத்துல தான் கட்சிக்குள்ள வந்தாரு... Son is more voice in the party.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X