நகராட்சி வளர்ச்சிப்பணிகளில் அதிகாரிகள் அலட்சியம்:பொதுமக்கள் பாதிக்கும் அவலம்

Added : ஆக 23, 2022 | |
Advertisement
உடுமலை:உடுமலை நகராட்சியில், நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள், இரு ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இழுபறியாகி வருவதோடு, பாதியில் நிற்கும் பணிகளால் மக்கள் பாதித்து வருகின்றனர்.உடுமலை நகராட்சி, 1918 ஜன., 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது; 1970ல், இரண்டாம் நிலை நகராட்சி; 1979ல், முதல் நிலை நகராட்சி; 1984 முதல் தேர்வு நிலை
நகராட்சி வளர்ச்சிப்பணிகளில் அதிகாரிகள் அலட்சியம்:பொதுமக்கள் பாதிக்கும் அவலம்

உடுமலை:உடுமலை நகராட்சியில், நுாற்றாண்டு விழா சிறப்பு நிதியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப்பணிகள், இரு ஆண்டுகளாக முடிவுக்கு வராமல் இழுபறியாகி வருவதோடு, பாதியில் நிற்கும் பணிகளால் மக்கள் பாதித்து வருகின்றனர்.உடுமலை நகராட்சி, 1918 ஜன., 1ல், மூன்றாம் நிலை நகராட்சியாக தோற்றுவிக்கப்பட்டது; 1970ல், இரண்டாம் நிலை நகராட்சி; 1979ல், முதல் நிலை நகராட்சி; 1984 முதல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.பழமையான இந்நகராட்சி, உருவாகி, நுாற்றாண்டுகளை கடந்த நிலையில், அதனை சிறப்பிக்கும் வகையில், இரு ஆண்டுக்கு முன், உட்கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்த, தமிழக அரசு சிறப்பு நிதியாக, ரூ.48.87 கோடி ஒதுக்கியது.ஆனால், இரு ஆண்டுக்கும் மேலாகியும், இத்திட்டத்தின் கீழ், பல பணிகள் துவங்காமலும், துவங்கிய பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டும், பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பாதியில் பணி நிறுத்தம்
இத்திட்டத்தின் கீழ், ரூ.15.98 கோடி செலவில், கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில் தடுப்புச்சுவர் கட்டும் பணி துவங்கியது.ஆனால், முறையாக திட்டமிடல் இல்லாமலும், உரிய முறையில் கழிவு நீர், மழை நீர் வெளியேறும் வகையில் திட்டம் வடிவமைக்காமல், நிதியை செலவிடும் நோக்கில் மட்டுமே பணி மேற்கொண்டு, அதுவும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.ஏற்கனவே, மண் கால்வாயாக இருந்த போது, மழை நீர், கழிவு நீர் வடிந்த நிலையில், தற்போது தேங்கி வருகிறது.இதனால், இப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளுக்குள் செல்ல முடியாமலும், கழிவு நீர் தேங்கி, துர்நாற்றம், கொசு உற்பத்தி என சுகாதார கேடுகளால் பாதித்து வருகின்றனர். மேலும், அகற்றப்பட்ட பாலங்கள் மீண்டும் கட்டப்படவில்லை.அதே போல், தங்கம்மாள் ஓடை பகுதியில், 12.97 கோடி ரூபாய் செலவில், ஒட்டுக்குளம் முதல், நகர எல்லை வரை, இரு புறமும் கான்கிரீட் தடுப்புச்சுவர் மற்றும் பேவர் பிளாக் கற்கள் பதித்து நடை பாதை மற்றும் தலைகொண்டம்மன் கோவில் முதல் பொள்ளாச்சி ரோடு வரை, ரோடு அகலப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்பணியும், ஆங்காங்கு, பெயரளவிற்கு மேற்கொள்ளப்பட்டு, நிறைவு செய்யப்படவில்லை. இதனால், இப்பகுதி மக்களும் பாதிக்கப்படுவதோடு, மழை காலங்களில் வெள்ள பாதிப்பு அபாயமும் உள்ளது.

கிடப்பில் பூங்கா பணி
மேலும், நகராட்சிக்குச்சொந்தமான, அண்ணா பூங்கா, ஜி.டி.வி., நகர், ஸ்டேட் பாங்க் காலனி, சாதிக் நகர், ராஜலட்சுமி நகர் பகுதியிலுள்ள பூங்காக்கள், 1.42 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்பட்டு, கூடுதலாக சிறுவர் விளையாட்டு சாதனங்களுடன் சிறுவர் பூங்கா அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.அண்ணா பூங்காவில், பழைய நடை பாதை அகற்றப்பட்டு, குழிகள் தோண்டப்பட்டன. அப்பணிகளும் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. மற்ற பூங்காக்களில் பணி துவங்கவில்லை.வாரச்சந்தையில், 6.84 கோடி ரூபாய் செலவில் மேம்பாட்டு பணி மற்றும் புதிதாக 60 கடைகள் கட்டும் பணி துவங்கி, குழி தோண்டப்பட்டது. தினமும், பல ஆயிரக்கணக்கான மக்கள், விவசாயிகள், வியாபாரிகள் வந்து செல்லும் நிலையில், இப்பணியும் குழி தோண்டியதோடு நிறுத்தப்பட்டதால், விபத்து அபாயமும், வாகனங்கள், விவசாயிகள் செல்ல முடியாமல் திணறி வருகின்றனர்.மேலும், 3.75 கோடி ரூபாய் செலவில், பஸ் ஸ்டாண்ட் விரிவாக்க திட்டமும் ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. ரோடுகளில், தெரு விளக்குகள் அமைத்தல், எல்.இ.டி., விளக்குகள் பொருத்துதல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவு பெறாமல், இரு ஆண்டுகளாக இழுபறியாகவே உள்ளது.

நினைவு துாண் என்னாச்சு?
தினமும் அதிகாரிகள் வந்து செல்லும், நகராட்சி அலுவலகம் முன், நுாற்றாண்டு நினைவு துாண் அமைக்க, ஏற்கனவே இருந்த பூங்கா அகற்றப்பட்டு, துாண் மட்டும் நிறுவப்பட்டது. ஆனால், அழகுபடுத்தும் பணி மேற்கொள்ளாமல், அலங்கோலமாக காணப்படுகிறது.எனவே, நகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படும் வளர்ச்சிப்பணிகளை தரமாகவும், உரிய திட்டமிடலுடன் மேற்கொள்ளவும் உரிய காலத்திற்குள் நிறைவு செய்து, பொதுமக்களுக்கு சிரமத்தை குறைக்கவும் பொறியியல் பிரிவு அதிகாரிகள் முன் வர வேண்டும்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X