புத்தக கண்காட்சி நாளை நிறைவு

Added : ஆக 23, 2022 | |
Advertisement
சிதம்பரம் : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.சிதம்பரம் கீழ வீதியில் உள்ள கோதண்டராமன் திருமண மண்டபத்தில் அபிநயா புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் துவங்கி, நடந்து வருகிறது. இதில் பிரபல பதிப்பாளர்களின் புத்தகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. வரலாறு, அறிவியல் நுால்கள், குழந்தைகள் மற்றும்

சிதம்பரம் : சிதம்பரத்தில் நடைபெற்று வரும் புத்தக கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது.

சிதம்பரம் கீழ வீதியில் உள்ள கோதண்டராமன் திருமண மண்டபத்தில் அபிநயா புத்தக கண்காட்சி மற்றும் விற்பனை கடந்த மாதம் துவங்கி, நடந்து வருகிறது. இதில் பிரபல பதிப்பாளர்களின் புத்தகங்கள் காட்சிக்காகவும், விற்பனைக்காகவும் வைக்கப்பட்டுள்ளது. வரலாறு, அறிவியல் நுால்கள், குழந்தைகள் மற்றும் இயற்கை உணவின் அதிசயம், பொது அறிவு நூல்கள் உள்ளிட்ட 1 லட்சத்திற்கும் மேலான புத்தகங்கள் கண்காட்சியில் குவிந்துள்ளன.

இதில் சிதம்பரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலிருந்து ஏராளமான புத்தக வாசிப்பாளர்கள் மற்றும் பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.கண்காட்சி நாளையுடன் நிறைவு பெறுகிறது. எனவே மாணவ, மாணவிகள் மற்றும் புத்தக வாசிப்பாளர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என, கண்காட்சி உரிமையாளர் விஜயரங்கன் கேட்டுக்கொண்டுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X