வடகிழக்கு பருவ மழைக்கு தயாராகிறது சென்னை தடுப்பு நடவடிக்கை!

Added : ஆக 23, 2022 | |
Advertisement
சென்னையில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், 2021ம் ஆண்டை விட, வரும் பருவ மழையில், 80 சதவீதம் வெள்ள பாதிப்பு குறையும் என, வார்டு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், வடகிழக்கு பருவ மழை முன் தடுப்பு நடவடிக்கையையும் மாநகராட்சி துவக்கி இருப்பதுடன், தங்கள்
வடகிழக்கு பருவ மழைக்கு தயாராகிறது சென்னை தடுப்பு நடவடிக்கை!



சென்னையில் வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, வார்டு வாரியாக உதவி பொறியாளர்களிடம், மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதில், 2021ம் ஆண்டை விட, வரும் பருவ மழையில், 80 சதவீதம் வெள்ள பாதிப்பு குறையும் என, வார்டு பொறியாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும், வடகிழக்கு பருவ மழை முன் தடுப்பு நடவடிக்கையையும் மாநகராட்சி துவக்கி இருப்பதுடன், தங்கள் பகுதியில் உள்ள மழை நீர் வடிகால் கட்டமைப்பை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வசதியும் ஏற்படுத்தப்படுகிறது.தமிழகத்தில் தி.மு.க., தலைமையிலான அரசு பொறுப்பேற்ற 2021 நவ., மாதத்தில் அதிகளவு மழை பெய்தது. சென்னையில் பெய்த கன மழையால் 2,000க்கும் மேற்பட்ட தெருக்களில் மழை நீர் தேக்கம் ஏற்பட்டது.குற்றச்சாட்டுமழை நீர் தேக்கத்திற்கு அ.தி.மு.க., ஆட்சியில் மழைநீர் வடிகால் கட்டமைப்பு முறையாக ஏற்படுத்தாதது தான் காரணம் என தி.மு.க., குற்றஞ்சாட்டியது. அதேநேரம், மழைநீர் வடிகால் துார் வாரி பராமரிக்கவில்லை என, தி.மு.க., அரசு மீது அ.தி.மு.க., குற்றஞ்சாட்டியது.
தற்போது தி.மு.க., அரசு பொறுப்பேற்று ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்ட நிலையில், இந்தாண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டால், முழுமையாக மக்கள் கோபத்திற்கு உள்ளாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.இதனால், 2021ல் மழை நீர் தேங்கிய பகுதிகள் மற்றும் வடிகால் இல்லாத பகுதிகளில் கட்டமைப்பு ஏற்படுத்தும் வகையில், 4,070.10 கோடி ரூபாய் மதிப்பில், 1,033.15 கி.மீ., நீளமுள்ள மழைநீர் வடிகால் பணி நடந்து வருகிறது. மேலும், இணைப்பு இல்லாத 144 இடங்கள் கண்டறிந்து, மழை நீர் வடிகாலுக்கான இணைப்புகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இப்பணிகளை துரிதப்படுத்தும் வகையில், சென்னையில் தனி கவனம் செலுத்தி முதல்வர் ஸ்டாலின், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் நேரு, தலைமை செயலர் இறையன்பு, நகராட்சி நிர்வாகத்துறை கூடுதல் தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி மேயர் பிரியா, கமிஷனர் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோர், அடிக்கடி ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர்.இந்நிலையில், வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கையை மாநகராட்சி துவக்கி உள்ளது.

ஆலோசனைஅதன்படி, சென்னை மாநகராட்சி பொது தலைமை பொறியாளர் ராஜேந்திரன் தலைமையில், வார்டு வாரியாக உள்ள இளநிலை மற்றும் உதவி பொறியாளர்களிடம், ரிப்பன் மாளிகையில் தனித்தனியாக ஆலோசனை நடந்து வருகிறது.இதில், வெள்ள பாதிப்பு ஏற்பட்டால் மக்களை தங்கவைப்பதற்கான இடங்கள் உள்ளிட்ட விபரங்கள் கேட்கப்பட்டு, அவர்களுக்கு ஆலோசனையும் வழங்கப்படுகிறது.இது குறித்து மாநகராட்சி தலைமை பொறியாளர் ராஜேந்திரன் கூறியதாவது:கடந்தாண்டுகளில் 64வது வார்டில் 28 இடங்களில் மழை நீர் தேக்கம் இருந்தது. தற்போது வரும் ஆண்டில் ஏழு இடங்கள் என்ற நிலையில் தான் மழைநீர் தேக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மழை நீர் தேக்கம், மழை நீர் வடிகால் மற்றும் கால்வாய் உள்ளிட்ட விபரங்கள் சென்னை மாநகராட்சியின், https://chennaicorporation.gov.in/gcc/ என்ற இணையதளத்தில் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.


90 சதவீத பணிகளுக்கு இலக்கு!

சென்னையில் வடகிழக்கு பருவ மழை துவங்க ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், தற்போது அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகள், 55 சதவீதம் வரை முடிந்துள்ளது. அக்., மாதத்திற்குள் 90 சதவீதம் வரை பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயித்துள்ளது. பணிகள் முழுமை பெறாவிட்டாலும், அங்கு மழைநீர் தேங்காமல் நடவடிக்கை எடுக்க ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி அறிவுறுத்தி உள்ளது.





- நமது நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X