சென்னையில் 26ம் தேதி வேலைவாய்ப்பு முகாம்

Added : ஆக 23, 2022 | |
Advertisement
சென்னை, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து, வரும் 26ம் தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.இந்த முகாம், சென்னை கிண்டி - ஆலந்துார் சாலையில், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை

சென்னை, சென்னையில் உள்ள அனைத்து வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் அலுவலகங்களும் இணைந்து, வரும் 26ம் தேதி, தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்த உள்ளன.இந்த முகாம், சென்னை கிண்டி - ஆலந்துார் சாலையில், ஒருங்கிணைந்த வேலைவாய்ப்பு அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, தொழில்சார் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில், காலை 10:00 மணி முதல் பகல் 2:00 மணி வரை நடக்கும்.முகாமில், எட்டாம் வகுப்பு, 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, கலை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பிரிவில் ஏதேனும் ஒரு பட்டம் ஆகிய கல்வித் தகுதியை உடைய அனைவரும் கலந்து கொள்ளலாம்.முகாமில், 20க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் பங்கேற்று, பணிக் காலியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை என, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குனர் வீரராகவராவ் தெரிவித்துள்ளார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X