கலப்பட எண்ணெய் கடைக்கு 'சீல்' 4,400 லிட்டர் பறிமுதல்

Added : ஆக 23, 2022 | |
Advertisement
மேற்கு மாம்பலம், மேற்கு மாம்பலத்தில் தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்த கடைக்கு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்ததுடன், 4,400 லிட்டர் எண்ணெயை பறிமுதல் செய்தனர்.சென்னை, மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில், ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் என்ற எண்ணெய் மொத்த விற்பனை கடை உள்ளது.இங்கு தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத்
கலப்பட எண்ணெய் கடைக்கு 'சீல்'  4,400 லிட்டர் பறிமுதல்


மேற்கு மாம்பலம், மேற்கு மாம்பலத்தில் தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்த கடைக்கு, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் 'சீல்' வைத்ததுடன், 4,400 லிட்டர் எண்ணெயை பறிமுதல் செய்தனர்.சென்னை, மேற்கு மாம்பலம் பிள்ளையார் கோவில் தெருவில், ஸ்ரீ மாலையம்மன் ஆயில் ஸ்டோர்ஸ் என்ற எண்ணெய் மொத்த விற்பனை கடை உள்ளது.இங்கு தரமற்ற சமையல் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக, உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, சென்னை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறையின் நியமன அலுவலர் சதிஷ்:குமார் தலைமையிலான அதிகாரிகள், நேற்று மாலை திடீரென சோதனையில் ஈடுபட்டனர். அந்த ஆயில் கடையில், பூமிக்கடியில் தொட்டி கட்டி, தரமற்ற நிலையில் எண்ணெயை சேமித்து விற்பனை செய்தது தெரியவந்தது.இதையடுத்து, தற்காலிகமாக கடைக்கு சீல் வைக்கப்பட்டது. மேலும், 4,400 லிட்டர் எண்ணெயை பறிமுதல் செய்தனர்.உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் சதீஷ் குமார் கூறியதாவது:கலப்பட எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக வந்த தகவலையடுத்து, சோதனை மேற்கொண்டோம்.சன் பிளவர் மற்றும் பாமாயில் ஆகிய எண்ணெயை கலந்து வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. ஆயிரம் லிட்டர் சன் பிளவர் ஆயில் மற்றும் 3,400 லிட்டர் பாம் ஆயில் என மொத்தம் 4,400 லிட்டர் கலப்பட எண்ணெய் பறிமுதல் செய்யப்பட்டது.முறையான உரிமம் இல்லாமல் கடையை நடத்தி வந்துள்ளனர். அந்த கடைக்கு தற்காலிகமாக சீல் வைத்துள்ளோம். எண்ணெய் மாதிரி, சோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், 10 லட்சம் ரூபாய் அபராதம் மற்றும் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.பொதுமக்கள் இது போன்ற விஷயங்களில், 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் புகார் அளிக்கலாம். அந்த புகாரின் மீது இரண்டு நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X