கூடுதல் தலைமைச் செயலர் காணொலி மூலம் ஆலோசனை

Added : ஆக 23, 2022 | |
Advertisement
விழுப்புரம் : பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் தலைமையில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் மோகன் பங்கேற்றார்.விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1ம் தேதி வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற இடங்களைக் கண்டறிந்து

விழுப்புரம் : பேரிடர் காலத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து காணொலி மூலம் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

கூடுதல் தலைமைச் செயலர், வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர் தலைமையில் நடந்த கூட்டத்தில், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், கலெக்டர் மோகன் பங்கேற்றார்.விழுப்புரம் மாவட்டத்தில் வரும் 1ம் தேதி வெள்ளத்தால் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்ற இடங்களைக் கண்டறிந்து அவற்றில் 5 இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக மாதிரி ஒத்திகைப் பயிற்சி நடத்துவது. தேசிய பேரிடர் மேலாண்மை முகமையினால் பல்வேறு துறைகள் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கப்பட்டது.எஸ்.பி., ஸ்ரீநாதா, திண்டிவனம் சப் கலெக்டர் அமித், மகளிர் திட்ட இயக்குனர் காஞ்சனா, ஆர்.டி.ஓ., ரவிச்சந்திரன் உட்பட பலர் பங்கேற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X