அமித் ஷா -ஆதித்யநாத் கருத்து வேறுபாடு?லோக்சபா தேர்தலில் எதிரொலிக்குமா!

Updated : ஆக 23, 2022 | Added : ஆக 23, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல், பா.ஜ.,வினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது. உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக உள்ள கேசவ் பிரசாத் மவுர்யா, அந்த பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், உ.பி., மாநில பா.ஜ., தலைவராக அவர்
அமித் ஷா - ஆதித்யநாத் கருத்து வேறுபாடு லோக்சபா தேர்தல்

உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல், பா.ஜ.,வினரிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.


உ.பி.,யில், முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு துணை முதல்வராக உள்ள கேசவ் பிரசாத் மவுர்யா, அந்த பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும், உ.பி., மாநில பா.ஜ., தலைவராக அவர் பொறுப்பேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

உ.பி., மாநில பா.ஜ., வட்டாரங்கள் கூறியதாவது:கேசவ் பிரசாத் மவுர்யா, 2017ல் உ.பி.,யில் சட்டசபை தேர்தல் நடந்தபோது, அம்மாநில பா.ஜ., தலைவராக இருந்தார். அந்த தேர்தலில் பா.ஜ., அபார வெற்றி பெற்றது.
கேசவ் பிரசாத் மவுர்யா தான், முதல்வராக தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டது. யாரும் எதிர்பாராத வகையில் யோகி ஆதித்யநாத் முதல்வராக தேர்வானார். இந்நிலையில், இந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ., வெற்றி பெற்று, மீண்டும் ஆட்சி அமைத்தாலும், தேர்தலில் மவுர்யா தோல்வி அடைந்தார். ஆனாலும், துணை முதல்வராக பதவியேற்றார்.

ஆனால், கடந்த முறை அவருக்கு தரப்பட்டிருந்த முக்கியமான பொதுப்பணித் துறை இந்த முறை தரப்படவில்லை. அதற்கு பதிலாக கிராமப்புற மேம்பாட்டு துறை தரப்பட்டது. இந்நிலையில், உ.பி., மாநில பா.ஜ., தலைவராக கேசவ் பிரசாத் மவுர்யா தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது. 'அரசாங்கத்தை விட கட்சி தான் எனக்கு பெரிது' என மவுர்யா தெரிவித்ததும், இந்த விவகாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.


தலித் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர், துணை முதல்வர் பதவியில் நியமிக்கப்பட உள்ளதாகவும், அதற்கு வழிவிடும் வகையில், மவுர்யா துணை முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய
வுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், இது தொடர்பான விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கும், யோகி ஆதித்யநாத்துக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் ஆதித்யநாத்துக்கு, பிரதமர் மோடியின் ஆதரவு இருப்பதாகவும் பேச்சு அடிபடுகிறது. வரும் 2024ல் லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில் ஏற்பட்டுள்ள இந்த கருத்து வேறுபாடு, தேர்தல் முடிவுகளில் பாதிப்பை ஏற்படுத்தலாம் என்ற கவலை கட்சி
யினரிடையே நிலவுகிறது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.- புதுடில்லி நிருபர் -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
24-ஆக-202206:50:40 IST Report Abuse
அப்புசாமி கவலையே வேண்டாம். யோகியார் அவர் பங்குக்கு 200 தொகுதிகள் ஜெயிச்சுருவாரு. அமித்ஷா தன் பங்குக்கு 200 ஜெயிச்சுருவாரு.இனி தமிழகத்தில் 200 தொகுதிஜெயிக்கற வழியைப் பாருங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X