காற்று வாங்கும் 'லிப்ட்' மேம்பாலம்; கவனம் ஈர்க்குமா?

Added : ஆக 24, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், எதிரெதிராக இரண்டு பஸ் ஸ்டாண்ட்கள் அமைந்துள்ளதால், மக்கள் எளிதாக ரோட்டை கடக்க வசதியாக, 'லிப்ட்' வசதியுடன் நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சியில், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து, கோவை, திருப்பூர், உடுமலை, பாலக்காடு, ஆனைமலை, வால்பாறை உள்பட பல்வேறு வழித்தடங்களில், 187 பஸ்கள்
காற்று வாங்கும் 'லிப்ட்' மேம்பாலம்; கவனம் ஈர்க்குமா?

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில், எதிரெதிராக இரண்டு பஸ் ஸ்டாண்ட்கள் அமைந்துள்ளதால், மக்கள் எளிதாக ரோட்டை கடக்க வசதியாக, 'லிப்ட்' வசதியுடன் நடைபாதை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.பொள்ளாச்சியில், புதிய மற்றும் பழைய பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் இருந்து, கோவை, திருப்பூர், உடுமலை, பாலக்காடு, ஆனைமலை, வால்பாறை உள்பட பல்வேறு வழித்தடங்களில், 187 பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், ஆயிரக்கணக்கான மக்கள் பஸ் ஸ்டாண்ட் வந்து செல்கின்றனர்.மக்கள் புதிய பஸ் ஸ்டாண்டில் இருந்து, பழைய பஸ் ஸ்டாண்டு செல்வதற்கு வசதியாக, சுரங்க நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.ஆனால், முறையான பராமரிப்பின்றி உள்ளதுடன், மழைக்காலத்தில் மழைநீர் தேங்குகிறது.இதனால், மக்கள் பலரும் சுரங்க நடைபாதையை பயன்படுத்தாமல், பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டை கடந்து, பஸ் ஸ்டாண்டுகளுக்குள் செல்கின்றனர்.இதனால், பாலக்காடு ரோட்டில் எப்போதும் மக்கள் அங்குமிங்குமாக கடப்பதால், போக்குவரத்து பாதித்து விபத்துகள் ஏற்படுகின்றன. இந்நிலையில், பஸ் ஸ்டாண்டுகளுக்குள் எளிதாக சென்று வர, நடைபாதை மேம்பாலம் (ஸ்கை வாக்) அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

4 இடத்தில் தேவை
இரண்டு ஆண்டுகளுக்கு முன், பொள்ளாச்சி - உடுமலை ரோட்டில், தனியார் கல்லுாரி அருகே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் வசதிக்காக, 'லிப்ட்' வசதியுடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இதை அமைக்கும் போது, இதேபோல் பொள்ளாச்சி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே அமைக்க, சாத்தியக்கூறுகள் உள்ளதா என ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.அதேபோல், பொள்ளாச்சி - கோவை ரோட்டில், கோவில்பாளையம், தாமரைக்குளம், ஒத்தக்கால்மண்டபம் பகுதிகளிலும் அமைக்க திட்டமிடப்பட்டது.ஆனால், இதுவரையில் தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளனர். மக்களின் நலன் கருதி நடைபாதை மேம்பாலங்கள் அமைக்க வேண்டும். பொள்ளாச்சி பஸ் ஸ்டாண்டில் மாற்றுத்திறனாளிகள், முதியோரின் வசதிக்காக 'லிப்ட்' உடன் கூடிய நடைபாதை மேம்பாலம் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.உடுமலை ரோட்டில், பி.ஏ.பி., அலுவலகம் மற்றும் தனியார் கல்லுாரி அருகே, 'லிப்ட்' வசதியுடன் நடைபாதை மேம்பாலம் அமைத்தாலும், பராமரிப்பின்றி உள்ளது. கட்டுமான பணிகள் நிறைவடைந்து பல ஆண்டுகளாகியும், 'லிப்ட்' வசதி செயல்படுத்தப்படாமல் உள்ளது.பொள்ளாச்சி வரும் முதல்வர், பி.ஏ.பி., ஆய்வு மாளிகையில் ஓய்வெடுத்த பின், பொதுக்கூட்டத்துக்கு செல்கிறார். அவர் தங்கும் இடத்துக்கு அருகில் உள்ள நடைபாதை மேம்பாலத்தின் பரிதாப நிலையை அறிந்து, நடவடிக்கை எடுக்க உத்தரவிடவேண்டும்.புதிதாக நடைபாதை மேம்பாலங்கள் கட்டும் திட்டத்தை வேகப்படுத்த வேண்டும், என, மக்கள் வேண்டுகோள்விடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X