சிறப்பு பகுதிகள்

சிந்தனைக் களம்

அப்பாவித் தமிழனுக்குப் புரிவது, நிதி அமைச்சருக்குப் புரியவில்லையே

Updated : செப் 03, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (178) | |
Advertisement
ஒரு செய்தித் தொலைக்காட்சியில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பொழிந்த பத்து நிமிடத்துக்கு உட்பட்ட 'கருத்து' மழை நம்மையெல்லாம் 'சிலிர்க்க' வைக்கிறது. 'ஆஹா... எப்பேர்ப்பட்ட பொருளாதார மேதையை நாம் பெற்று இருக்கிறோம்' என்று உவகை அடைய வைக்கிறது.மத்திய அரசையும் தலைமை அமைச்சரையும் தன் மேதாவிலாசத்தால் 'பொளந்து கட்டிய' வேகமும் தகவல்களும் 'எங்கே இருந்தார் இந்த
பழனிவேல் தியாகராஜன், தமிழக நிதி அமைச்சர் , சிந்தனைக் களம், Palanivel Thiagarajan, Tamil Nadu Finance Minister,

ஒரு செய்தித் தொலைக்காட்சியில் தமிழக நிதி அமைச்சர் தியாகராஜன் பொழிந்த பத்து நிமிடத்துக்கு உட்பட்ட 'கருத்து' மழை நம்மையெல்லாம் 'சிலிர்க்க' வைக்கிறது. 'ஆஹா... எப்பேர்ப்பட்ட பொருளாதார மேதையை நாம் பெற்று இருக்கிறோம்' என்று உவகை அடைய வைக்கிறது.மத்திய அரசையும் தலைமை அமைச்சரையும் தன் மேதாவிலாசத்தால் 'பொளந்து கட்டிய' வேகமும் தகவல்களும் 'எங்கே இருந்தார் இந்த மனுஷன்' என்று வாய்பிளக்க வைக்கிறது.பல கேள்விகள்latest tamil news
அவர் கேட்ட ஒவ்வொரு கேள்வியும் அப்பாவித் தமிழனான நமக்குள் மேலும் பல கேள்விகளை எழுப்புகிறது.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கொஞ்சம் நாட்டுப் பற்றோடும் உளப்பூர்வமான ஆதங்கத்தோடும் ஒரு கருத்தைச் சொல்லிவிட்டார்.'இலவசம் என்றால் என்ன என்பதை வரையறை செய்ய வேண்டும்' என்பதுதான் ரமண வார்த்தைகள். உடனே தியாக ராஜனோ 'இந்தக் கேள்வியைக் கேட்க இந்த அமைப்புக்கு என்ன தகுதி இருக்கிறது' என்கிறார்.அப்படியென்றால் தமிழகத்தில் நடைபெறும் ஒவ்வொரு வழக்குக்கும் எதற்கு உச்ச நீதிமன்றத்துக்கு நீங்கள் போகிறீர்கள் 'அதற்குத் தான் மக்கள் மன்றம் இருக்கிறது. அவர்கள் எங்களைத் தேர்வு செய்திருக்கின்றனரே' என்றார் தியாகராஜன்.அப்படியென்றால் இலவசத்தைக் கொடுங்கள் என்று மக்களா உங்களைக் கேட்டனர். நீங்கள் மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்குத் தேவையான வேலைவாய்ப்பையும் பொருளாதார வளத்தையும் உருவாக்க முடியாமல் போனது நீங்கள் செய்த பாவம் அல்லவா.
அந்தப் பாவத்துக்குச் செய்யும் 'பரிகாரமும் பிராயச்சித்தமும்' தானே இலவசம்.அப்பாவித் தமிழனான நமக்கே இந்தக் கேள்வியைக் கேட்கத் தோன்றும்போது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேட்க மாட்டாரா என்ன!பிரதமர் மோடி 'இலவசங்களால் மக்களுடைய திறன் வளராது. இலவசங்கள் தற்காலிக தீர்வை மட்டுமே தரும். மாறாக திறமையை வளர்க்க கூடிய நலத்திட்டங்களை அரசு செய்ய வேண்டும்' என்று தெரிவித்து இருந்தார்.இந்த விவரங்களை அந்த ஆங்கிலத் தொலைக்காட்சி நெறியாளர் தெரிவிக்கும்போது நமது நிதி அமைச்சருடைய உடல் மொழியைப் பார்க்க வேண்டுமே... ஏதோ புழு பூச்சி போன்ற அற்பஜீவிகளைப் பார்ப்பது போலவும் இவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி இருக்கிறதே என்ற அசூசையோடும் இருந்தது அந்த மேதாவிலாசத்தவர் உடல்!'மேதாவிலாசம்'அதன் பிறகு அவர் பேசியது தான் மிக மிக 'மேதாவிலாசம்''இதைத் தெரிவிப்பவர்களுக்கு முதலில் சட்ட ரீதியான அனுமதி இருக்க வேண்டும். இலவசங்களை கொடுக்க கூடாது என்று சட்டத்தில் எங்காவது சொல்லி இருக்கிறதா? அது இல்லை! இப்படிச் சொல்பவர்கள் துறை வல்லுனர்களாக இருக்க வேண்டும். பொருளாதாரத் துறையில் நோபல் பிஎச்.டி. அல்லது இந்த துறைகளில் நீங்கள் எங்களை விட சிறந்தவர் என்று சொல்வதற்கான ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும். அப்படி எதுவும் இல்லாத பட்சத்தில் நீங்கள் எப்படி இதை செய்ய கூடாது என்று சொல்ல முடியும்.

'உங்களின் சாதனைகள் செயல்பாடுகள் எங்களை விட சிறப்பாக இருந்தால் எங்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லலாம். நீங்கள் கடனை அடைத்து விட்டீர்கள் பொருளாதாரத்தைச் சரி செய்துவிட்டீர்கள் தனி நபர் வருமானத்தை உயர்த்தி விட்டீர்கள் என்றால் உங்கள் பேச்சை நாங்கள் கேட்கலாம். அது எதுவுமே இல்லாத போது உங்களின் பேச்சை நாங்கள் ஏன் கேட்க வேண்டும்' என்றது அவரது திருவாய்.இதெல்லாம் பிரதமரைப் பார்த்து இவர் கேட்கிறாரா அல்லது இவரை நிதி அமைச்சர் பதவியில் அமரவைத்து அழகுபார்க்கும் சித்தரஞ்சன் சாலை சீமானைக் கோர்த்து விடுகிறாரா என்று புரியவில்லை.

தொழில்துறை நிதித் துறை நிகழ்ச்சிகளில் எல்லாம் தமிழக முதல்வர் ஸ்டாலின் கலந்து கொள்கிறாரே உரையாற்றுகிறாரே கருத்து சொல்கிறாரே. அவர் எங்கேனும் அப்பாவித் தமிழர்களுக்குத் தெரியாமல் நோபல் பரிசு வாங்கியிருக்கிறாரோ.நீங்கள் சாதனையாளராஏதேனும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சி? அவருக்கும் மூத்தவரான மு.கருணாநிதி கூட ரகசியமாக நோபல் பரிசு அல்லது பிஎச்.டி. வாங்கி இருப்பாரோ.இந்தத் துறையில் அதாவது பொருளாதாரம் நிதி நிர்வாகத்தில் எங்களைவிடச் சிறந்தவர் என்று சொல்வதற்கு ஏதாவது ஒரு ஆதாரம் இருக்க வேண்டும் என்கிறார் தியாகராஜன்.உங்கள் 'லாஜிக்' படியே வருவோம் மிஸ்டர் தியாகராஜன். உங்களைக் கேள்வி கேட்க அவர்கள் சாதனையாளர்களாக இருக்க வேண்டும் என்றால் நீங்கள் மத்திய அரசைப் பார்த்து கேள்வி கேட்கிறீர்களே? நீங்கள் சாதனையாளரா?நீங்கள் தமிழகத்தின் அத்தனை கடனையும் அடைத்து விட்டீர்களா. பொருளாதாரத்தைச் சரி செய்து விட்டீர்களா. தனிநபர் வருமானத்தை உயர்த்தி விட்டீர்களா


அவல நிலைதானேடாஸ்மாக் என்ற ஒன்று மட்டும் இல்லையென்றால் தமிழக அரசுப் பணியாளர்களுக்கு மாதச் சம்பளம் கூட போட முடியாது என்ற அவல நிலைதானே இங்கே இருக்கிறது!என்ன ஒன்று உங்களைப் போல் சரளமாக அடுக்கு மொழி ஆங்கிலத்தில் அடித்துவிட பிரதமர் மோடிக்குத் தெரியாது. அவர் ஒன்றும் அமெரிக்கா போய் நிதி நிர்வாகம் படிக்கவில்லை. ஆனால் மக்களுடைய அடிநாதம் என்ன என்பதைப் படித்ததால் தான் அவரால் உண்மையைப் பேச முடிகிறது. அவர் பேசும் உண்மை உங்களுக்குக் கசக்கிறது!இன்னொரு முத்தையும் அன்றைய தொலைக்காட்சி பேட்டியில் திருவாய் மலர்ந்தருளினார் தியாகராஜன்.கூடுதல் நிதி ஒதுக்கீடு'நாங்கள் ஒரு ரூபாய் கொடுக்கிறோம் அவர்கள் 35 பைசா தான் திரும்பித் தருகின்றனர்' என்று ஜி.எஸ்.டி. வசூல் செய்து தரும் தொகையைத் தான் இப்படிக் கூறினார் நிதி அமைச்சர். 'கூடுதலாக நிதி திரட்டித் தருபவர்களுக்குத் தான் கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்' என்கிறார்.சரி... தமிழகத்தில் அதிக பட்ச ஜி.எஸ்.டி. வசூல் செய்வது கோவை மண்டலம். மிக மிகக் குறைவாக வசூல் செய்வது டெல்டா மண்டலம். அப்படியென்றால் கோவை மண்டலத்துக்கு கூடுதல் நிதியை மாநில அரசு பிரித்துத் தருமாகூட்டாட்சியின் மகிமை


இருப்பவர்களிடம் வசூலித்து இல்லாதவர்களையும் அரவணைத்து வாழச் செய்வது தான் ஒரு நாட்டின் இறையாண்மைப் பண்பு. தமிழகம் மட்டுமல்ல வளர்ந்த மாநிலங்கள் அனைத்துமேகூடுதல் நிதியை வசூலித்து வளரும் மாநிலங்களோடு பகிர்ந்து வருகின்றன; இதுதான் கூட்டாட்சியின் மகிமை.ஆச்சரியம்அப்பாவித் தமிழனான நமக்கே இந்த எளிய 'லாஜிக்' புரியும்போது மெத்தப் படித்த தமிழக நிதி அமைச்சருக்கு இது புரியவில்லை என்பது ஆச்சரியம். வேகம் கண்ணை மறைக்கலாம்; ஆனால் கருத்தை மறைக்கக் கூடாது; மறைக்கவும் முடியாது.இதாவது புரிகிறதா அல்லது இதுவும் புரியவில்லையா மிஸ்டர் தியாகராஜன்.
- அப்பாவித்தமிழன்

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (178)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Samathuvan - chennai,இந்தியா
25-ஆக-202207:17:48 IST Report Abuse
Samathuvan எரியட்டும் நன்றாக எரியட்டும் தடவுனது பின்னால் என்பதால் இனி ஒன்றியம் உட்கார கூட முடியாத வேதனை. என்ன செய்வது அடிக்கும் ஒவ்வொரு அடியும் ஒன்றியம் சார்ந்தவர்களுக்கு இனி இடியாக இருக்கும் என்பதை யாராலும் தடுக்க முடியாது.
Rate this:
Cancel
Shan - Toronto,கனடா
25-ஆக-202206:53:23 IST Report Abuse
Shan தியாகராஜனுக்கும் வெளி உறவுத்துறை அமைச்சர் திரு. ஜெய்சங்கர் அவர்களுக்கும் நிறைய வேற்றுமை உள்ளது. திரு. ஜெய்சங்கர் மிக்கப்படித்த அறிவாளி, பண்புள்ளவர். தியாகராஜனுக்கு அது இல்லை.
Rate this:
Cancel
Tamil Inban - Singapore,சிங்கப்பூர்
25-ஆக-202205:31:18 IST Report Abuse
Tamil Inban திரு. பழனிவேல் தியாகராஜன் சொல்வதுல் என்ன தவறு. பிரதமர் தமிழகத்தில் பெண்களுக்கான இரு சக்கர வாகன மானியத்திட்டத்தை துவக்கி வைக்க தமிழகம் வந்தார்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X