முதல்வர் பங்கேற்கும் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இன்று நடக்கும், தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி அண்ணா திடலில், தி.மு.க., சார்பில், பொதுக்கூட்டம் இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.ஈச்சனாரியில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர், ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு,
முதல்வர் பங்கேற்கும் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

பொள்ளாச்சி:பொள்ளாச்சியில் இன்று நடக்கும், தி.மு.க., பொதுக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.பொள்ளாச்சி அருகே, ஆச்சிப்பட்டி அண்ணா திடலில், தி.மு.க., சார்பில், பொதுக்கூட்டம் இன்று மாலை, 5:00 மணிக்கு நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்க உள்ளார்.ஈச்சனாரியில் அரசு விழாவில் பங்கேற்கும் முதல்வர், ஒத்தக்கால் மண்டபம், கிணத்துக்கடவு, கோவில்பாளையம், பொள்ளாச்சி வழியாக, மாக்கினாம்பட்டி நீர்வளத்துறை விருந்தினர் மாளிகைக்கு மதியம், 1:00 மணிக்கு வருகிறார்.அதன்பின், மாலை, 4:50 மணிக்கு விருந்தினர் மாளிகையில் இருந்து புறப்பட்டு, ஆச்சிப்பட்டி அண்ணா திடல் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க மாலை, 5:00 மணிக்கு வருகிறார்.

கட்சியினர் வரவேற்பு
மாக்கினாம்பட்டி விருந்தினர் மாளிகையில் தங்கும் முதல்வர், மாநாடு பந்தலுக்கு வரும் வழித்தடத்தில் கட்சியினர் வரவேற்பு கொடுக்க தயாராகி உள்ளனர். எம்.சி.இ.டி., கல்லுாரி முதல், மொத்தம், 19 இடங்களில் கட்சியினர் வரவேற்பு கொடுக்க திட்டமிட்டுள்ளனர். ரோட்டோரத்தில் வழி நெடுகில், மொத்தம், 27 ஆயிரம் பேர் வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாகவும் கட்சியினர் தெரிவித்தனர்.

பணி விறுவிறு
ஆச்சிப்பட்டியில் மாநாடு நடைபெறும் இடத்தில், முதல்வர் பேச உள்ள பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணி நேற்று தீவிரமாக மேற்கொள்ளப்பட்டது. கட்சியில் புதியதாக சேர வருபவர்கள், பொதுமக்கள் என அனைவரும் அமர நாற்காலிகள் போடப்படுகின்றன.மாநாடு நடைபெறும் இடம் முழுவதும் மின் விளக்குகளும் அமைக்கப்பட்டுள்ளன. இப்பணியை அமைச்சர் செந்தில்பாலாஜி தலைமையில், மாவட்ட பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன் மற்றும் கட்சி நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

பாதுகாப்பு
மாநாட்டில் முதல்வர் பங்கேற்பதையடுத்து போலீசார் பாதுகாப்பை பலப்படுத்தி உள்ளனர். வாகனங்கள் நிறுத்துமிடம், மாற்றுப்பாதையில் வாகனங்கள் இயக்குதல் உள்ளிட்டவை குறித்து போலீசார் ஆலோசனை நடத்தினர்.போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில், போக்குவரத்துக்கு மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கட்சியினர் வாகனங்கள் நிறுத்தவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக, போலீசார் தெரிவித்தனர்.மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையில், எஸ்.பி., பத்ரி நாராயணன், டி.எஸ்.பி., தீப சுஜிதா மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர், எஸ்.ஐ., போலீசார் என, 2,250 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X