நகரியில் தொடர் மழை விவசாயிகள் நெல் பயிரிடுவதில் ஆர்வம்| Dinamalar

நகரியில் தொடர் மழை விவசாயிகள் நெல் பயிரிடுவதில் ஆர்வம்

Added : ஆக 24, 2022 | |
நகரி, தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை தேர்வு செய்து பயிரிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.சித்துார் மாவட்டம், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நெசவுக்கு அடுத்தபடியாக விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்வதாலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து
நகரியில் தொடர் மழை விவசாயிகள் நெல் பயிரிடுவதில் ஆர்வம்



நகரி, தொடர்ந்து மழை பெய்து வருவதால், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் விவசாயிகள் அதிக மகசூல் தரும் நெல் ரகங்களை தேர்வு செய்து பயிரிடும் பணியில் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர்.சித்துார் மாவட்டம், நகரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் நெசவுக்கு அடுத்தபடியாக விவசாயம் செய்து வருகின்றனர்.இந்நிலையில், தொடர்ந்து மழை பெய்வதாலும், நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து வருவதாலும், ஏரி, குளம் மற்றும் கால்வாய்களில் பாசனத்திற்கு தண்ணீர் வந்துள்ளது.ஐந்து ஆண்டுகளாக விவசாயிகள் கரும்பு, சூரியகாந்தி, வேர்க்கடலை, பப்பாளி போன்ற பயிர்கள் சாகுபடி செய்து வந்தனர்.தற்போது பெய்து வரும் தொடர் மழையால், நகரி அடுத்த, தெரணி, முடிபள்ளி, மேளப்பட்டு, தடுக்குபேட்டை, மூலநத்தம், வி.கே.ஆர்.புரம், நாகராஜகுப்பம், காட்டுபுத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 2,500 ஏக்கர் நிலப்பரப்பில் நெல் சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் நாற்று விட்டு, நடும் பணியில் ஈடுபட்டனர்.தற்போது, ஆடுதுறை 37, ஆடுதுறை 45, பி.பி.டி.,912, சோனா மசூரி போன்ற நெல் ரக பயிர்களால் அதிகளவில் மகசூல் பெற முடியும் என்பதால், பெரும்பாலான விவசாயிகள், நெல் சாகுபடி செய்வதற்கு மாறியுள்ளனர்.நெற்பயிரில் உள்ள 'களைகள்' எடுக்கப்பட்ட பின், 40 நாட்கள் விவசாயிகள் நன்கு கவனம் செலுத்தி, நெற்பயிருக்கு உரங்கள் மற்றும் பூச்சிகொல்லி மருந்து அடிக்க வேண்டும். நெற்பயிர் கதிர்வரும் போது பூச்சிகள் தாக்கப்படாமல் கண்காணிக்க வேண்டும்.நெல் அறுவை செய்த பின், அரசு கொள்முதல் நிலையங்களில் விற்பனை செய்யலாம். 100 கிலோ நெல் மூட்டைக்கு, 1,800 - 2,000 ரூபாய் வரை வருவாய் கிடைக்கும்.மாறாக தனியார் வியாபாரிகளிடம், 100 கிலோ கொண்ட நெல் மூட்டைக்கு, 1,200 - 1,400 ரூபாய் வரை மட்டுமே விற்க முடியும்.எனவே நெல் அறுவை செய்துள்ள விவசாயிகள், அரசு கொள்முதல் நிலையத்தில் 'ஆன் லைன்' வாயிலாக பதிவு செய்தால் கூடுதல் விலை பெறலாம்.மேலும், இயற்கை சீற்றத்தால், நெல் பயிர் சேதம் அடைந்தால் அதற்கான இழப்பீடும் பெறலாம் என, புத்துார் வட்டார விவசாயத் துறை இணை இயக்குனர் ரமேஷ்ராஜூ தெரிவித்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X