பி.எஸ்.ஜி., கல்லூரி பவள விழா:தமிழக முதல்வர் பங்கேற்கிறார்| Dinamalar

பி.எஸ்.ஜி., கல்லூரி பவள விழா:தமிழக முதல்வர் பங்கேற்கிறார்

Added : ஆக 24, 2022 | |
கோவை:பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியின் பவள விழாவை முன்னிட்டு நடத்தப்பட உள்ள நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.கல்லுாரி நிர்வாகம் சார்பில், கமிட்டி உறுப்பினர் நந்தகுமார் கூறியதாவது:கடந்த, 75 ஆண்டுகளில், கல்லுாரி பல உயர்ந்த நிலைகளை கடந்துள்ளது. பவள விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11ம் தேதி, சிறப்பு தபால்

கோவை:பி.எஸ்.ஜி., கலை, அறிவியல் கல்லுாரியின் பவள விழாவை முன்னிட்டு நடத்தப்பட உள்ள நிகழ்ச்சியில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்.கல்லுாரி நிர்வாகம் சார்பில், கமிட்டி உறுப்பினர் நந்தகுமார் கூறியதாவது:கடந்த, 75 ஆண்டுகளில், கல்லுாரி பல உயர்ந்த நிலைகளை கடந்துள்ளது. பவள விழாவையொட்டி, பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, கடந்த 11ம் தேதி, சிறப்பு தபால் தலை வெளியிடப்பட்டது. வரும் 26ம் தேதி மாலை, 6:00 மணிக்கு கல்லுாரியின் ஜி.ஆர்.டி., அரங்கத்தில் நடக்க உள்ள பவளவிழா நிகழ்ச்சிகளின் நிறைவு விழாவில், தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார். கல்விப்பணியை தாண்டி சமூக கடமையை செய்ய வேண்டும் என்பது நிர்வாகத்தின் விருப்பம். இதன் ஒரு பகுதியாக, நலிவடைந்துள்ள மண்பானை கலைஞர்களிடம் இருந்து, 75 ஆயிரம் மண்பானைகள் விலைக்கு வாங்கப்பட்டுள்ளன. அவை பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளன. பானை வாங்கியதற்கான காசோலையை, தமிழக முதல்வர் ஸ்டாலின் மண்பானை தொழிலாளர்களிடம் விழாவில் வழங்க உள்ளார். கின்னஸ் சாதனைக்காக, 75 ஆயிரம் மண்பானைகளும், 75 எண் வடிவில் கல்லுாரி மைதானத்தில் அடுக்கி வைக்கப்பட உள்ளன. முதல்வர் அதை பார்வையிட்டு, துவக்கி வைக்க உள்ளார். இறுதியில், கின்னஸ் சாதனையை அறிவிக்க உள்ளார். விழாவில், சிறுமுகை பட்டு நெசவாளர்களால் நெய்யப்பட்ட, பட்டுத்துணியாலான நினைவுப் பரிசு, தமிழக முதல்வருக்கு வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X