தெற்கு குறுமைய கபடி :மாணவர்கள் 'கிடுக்கிப்பிடி'

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கோவை:தெற்கு குறுமைய அளவிலான கபடி போட்டியில், மாணவர்கள் அசத்தலாக விளையாடினர்.கோவை தெற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், ஈச்சனாரி கற்பகம் நிகர்நிலைப்பல்கலையில் நடைபெற்று வருகிறது. இதில், 14, 16, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால், ஹேண்ட்பால், ஹாக்கி, கபடி, இறகுப்பந்து, கோ கோ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 60க்கும்
தெற்கு குறுமைய கபடி :மாணவர்கள் 'கிடுக்கிப்பிடி'

கோவை:தெற்கு குறுமைய அளவிலான கபடி போட்டியில், மாணவர்கள் அசத்தலாக விளையாடினர்.கோவை தெற்கு குறுமைய விளையாட்டு போட்டிகள், மதுக்கரை அரசு மேல்நிலைப்பள்ளி சார்பில், ஈச்சனாரி கற்பகம் நிகர்நிலைப்பல்கலையில் நடைபெற்று வருகிறது. இதில், 14, 16, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான வாலிபால், ஹேண்ட்பால், ஹாக்கி, கபடி, இறகுப்பந்து, கோ கோ உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகின்றன. 60க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றுள்ளனர்.நேற்று நடந்த, 19 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான கபடி போட்டியில், செட்டிப்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 30 - 24 என்ற புள்ளிக்கணக்கில் குறிச்சி அரசு மேல்நிலைப்பள்ளி அணியையும்; கெங்குசாமி நாயுடு பள்ளி அணி, 25 - 20 என்ற புள்ளிக்கணக்கில், குளோபல் பாத்வேஸ் பள்ளி அணியையும்; கிரஸண்ட் பள்ளி அணி, 26 - 22 என்ற புள்ளிக்கணக்கில் சுண்டக்காமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அணியையும்; பண்டித நேரு பள்ளி அணி, 30 - 10 என்ற புள்ளிக்கணக்கில் எஸ்.ஆர்.வி., பள்ளியையும்;குனியமுத்துார் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 35 - 28 என்ற புள்ளிக்கணக்கில், கலைவாணி பள்ளி அணியையும் வீழ்த்தி, காலிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X