பாடம் படிக்க குதித்து, குதித்துதான் போகணும்! கோவைப்புதூரில் மேடும் பள்ளமுமான சாலை சரியாக்கப்படுமா?| Dinamalar

பாடம் படிக்க குதித்து, குதித்துதான் போகணும்! கோவைப்புதூரில் மேடும் பள்ளமுமான சாலை சரியாக்கப்படுமா?

Added : ஆக 24, 2022 | |
கொசு தொல்லைநீலிக்கோணம்பாளையம் ரோடு, டி கிராஸ் 2, சக்கரை செட்டியார் நகரில் உள்ள கால்வாயில் புதர்கள் மண்டி சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. பலமுறை புகார் செய்தும், சுத்தம் செய்வதற்கு யாரும் வரவில்லை. துர்நாற்றம் வீசுகிறது.- கார்த்தி, நீலிக்கோணம்பாளையம்.தெருநாய் தொல்லைதிருமகள் நகர் (12வது கிராஸ்) - தாமோதரசாமி நகர், சவுரிபாளையம் அஞ்சல்
பாடம் படிக்க குதித்து, குதித்துதான் போகணும்! கோவைப்புதூரில் மேடும் பள்ளமுமான சாலை சரியாக்கப்படுமா?

கொசு தொல்லை

நீலிக்கோணம்பாளையம் ரோடு, டி கிராஸ் 2, சக்கரை செட்டியார் நகரில் உள்ள கால்வாயில் புதர்கள் மண்டி சாக்கடை நீர் தேங்கி நிற்கிறது. இதனால் கொசுத்தொல்லை அதிகமாக இருக்கிறது. பலமுறை புகார் செய்தும், சுத்தம் செய்வதற்கு யாரும் வரவில்லை. துர்நாற்றம் வீசுகிறது.- கார்த்தி, நீலிக்கோணம்பாளையம்.

தெருநாய் தொல்லை
திருமகள் நகர் (12வது கிராஸ்) - தாமோதரசாமி நகர், சவுரிபாளையம் அஞ்சல் பகுதியில் சுற்றித்திரியும் தெருநாய்களால், அப்பகுதி மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். வாகன ஓட்டிகளை தெருநாய்கள் துரத்துவதால், விபத்துக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.- ரமேஷ், சவுரிபாளையம்.

குதித்து குதித்து செல்லும் சாலை
கோவைப்புதூர் சி.பி.எம்., காலேஜ் டூ சி.எஸ்., அகாடமி ஸ்கூல், கிருஷ்ணா கல்லூரி செல்லும் வழியில் சாலை குண்டும் குழியுமாக இருக்கிறது. பள்ளி, கல்லூரி பேருந்து மற்றும் பொது மக்களுக்கு மிகவும் சிரமமாக உள்ளது.- திரிலோகசுந்தரி, கோவைப்புதுார்.

பராமரிப்பின்றி

கிடக்கும் நடைபாதை
எழில் மிகு பேரூர் ஏரியில் அமைந்துள்ள நடைபாதை மற்றும் அதையொட்டிய தார்சாலை மண்மூடி, செடிகள் வளர்ந்து உள்ளது. பராமரிப்பு பணிகள் மேற்கொண்டு, பொது மக்கள் பயன்பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.- வேணுகோபால், கோவைப்புதூர்

வாகன நெரிசல்
பீளமேடு ரயில்நிலையம் டூ தண்ணீர்பந்தல், விளாங்குறிச்சி சாலையில் அதிக லாரிகளை நிறுத்திச்செல்கின்றனர். காலை, மாலை நேரங்களில் இவ்வழியாக செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. பல லாரிகள் சாலையை ஆக்கிரமித்து நிறுத்தப்படுகின்றன. அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும்.- விக்னேஷ், சேரன்மாநகர்.

வாகன ஓட்டிகள் அவதி
முத்தண்ணன் குளத்தை ஒட்டியுள்ள சாலையை, சீரமைத்து புதிய சாலை போட்டு மூன்று மாதங்கள் கூட ஆகவில்லை. திரும்பவும் சாலையை தோண்டுகின்றனர். சாலையை தோண்டி சரி செய்ய மாதக்கணக்கில் ஆகிறது. இதனால் இப்பகுதி வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.-ராஜ், கோவை.

மின் விளக்கு வேண்டும்
சுப்பிரமணியம் பாளையம், வார்டு,15 தேவி அவென்யூ, இரண்டாவது வீதியில் உள்ள இந்த மின் கம்பத்தில், கடந்த மூன்று மாதங்களாக மின்விளக்கு எரிவதில்லை. மாலை நேரங்களில் இருட்டாக இருப்பதால், பொதுமக்கள் அவதியடைகின்றனர்.- குமார், சுப்பிரமணியம்பாளையம்.

தெரு விளக்கு எரியலை
வரதராஜபுரம், இ.எஸ்.ஐ., மருத்துவமனை எதிரில் உள்ள, ஆர்.வி.எல்.,நகரில் உள்ள மின் கம்பத்தில் தெரு விளக்கு எரிவதில்லை. இரவு நேரங்களில் கும்மிருட்டாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-ரவி, வரதராஜபுரம்.

சாலை குழியால்

விபத்து
மருதமலை சாலை, வேளாண் பல்கலை மெயின் கேட் எதிரில், சாலையில் பெரிய குழி ஏற்பட்டுள்ளது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. கடந்த வாரத்தில் மட்டும் மூன்று வாகனங்கள், விபத்தில் சிக்கியுள்ளன. சாலையை சீரமைத்தால் பெரும் விபத்தை தடுக்கலாம்.-ராம், வடவள்ளி.

சீர் குலைந்த தார் சாலை
குறிச்சி சிட்கோ தொழில் பேட்டை வளாகத்தில், சில மாதங்களுக்கு முன்பு போட்ட தார் ரோடு தற்போது சீர்குலைந்துள்ளது. வாகனத்தில் செல்வோர் நாள்தோறும் விபத்துக்குள்ளாகிறார்கள். தெருவிளக்கு வசதிகள் இல்லாததால், இரவு நேரங்களில் சிரமமாக உள்ளது. அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.-குட்டி ராமசாமி,

குறிச்சி.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X