நோட்டுக்கு முக்கியத்துவம் கொடுங்க! கண்டுகொள்ளுமா கல்வித்துறை

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கோவை:அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள், நோட்டு, புத்தக பை உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட பொருட்கள், அரசு இலவசமாக வழங்குகிறது. கல்வியாண்டு துவக்கத்தில், கற்றல் சார்ந்த நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும். பின், அவ்வப்போது சைக்கிள், லேப்டாப் போன்றவை மாணவர்களுக்கு வழங்குவது வழக்கம். நடப்பாண்டில், பள்ளி திறந்து, இரண்டரை மாதங்கள் ஆகியும், சில நோட்டுகள்

கோவை:அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு, புத்தகங்கள், நோட்டு, புத்தக பை உள்ளிட்ட 14 வகையான நலத்திட்ட பொருட்கள், அரசு இலவசமாக வழங்குகிறது. கல்வியாண்டு துவக்கத்தில், கற்றல் சார்ந்த நலத்திட்ட பொருட்கள் வழங்கப்படும். பின், அவ்வப்போது சைக்கிள், லேப்டாப் போன்றவை மாணவர்களுக்கு வழங்குவது வழக்கம். நடப்பாண்டில், பள்ளி திறந்து, இரண்டரை மாதங்கள் ஆகியும், சில நோட்டுகள் வழங்காமல் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.குறிப்பாக, தமிழ், ஆங்கிலம் கட்டுரை நோட்டு, கணித பாடத்தில், வடிவியல், வரைப்படத்தாள் நோட்டு, அறிவியல் ஆய்வக கையேடு, சமூக அறிவியல் பாடத்திற்கு, உலக வரைப்படங்கள் அடங்கிய புத்தகம், தற்போது வரை பள்ளிகளுக்கு முழுமையாக விநியோகிக்கப்படவில்லை. இதனால், செயல்முறை வகுப்புகள் நடத்த முடியாத சூழல் நீடிக்கிறது. விரைவில் நோட்டு புத்தகம் கிடைக்கும் என எதிர்பார்த்து காத்திருப்பதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர். அரசுப்பள்ளி அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'புத்தக பை, காலணி, சீருடை ஆகியவை வழங்க தாமதம் ஏற்பட்டாலும், கடந்தாண்டில் வழங்கியிருப்பதால் சிக்கல் ஏற்படாது. ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை அனைத்து பாடங்களிலும், செய்முறை வகுப்புகளுக்கான நோட்டு வழங்காமல் இழுத்தடிப்பதால், வகுப்பு எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது. காசு கொடுத்து நோட்டு வாங்க, அனைத்து குழந்தைகளாலும் முடியாது. நலத்திட்ட பொருட்களில், எது கற்றலுக்கு அத்தியாவசியமாக தேவைப்படுகிறதோ, அதை முன்கூட்டியே வழங்குவது அவசியம்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X