மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்:சி.ஐ.டி.யு., கூட்டத்தில் வலியுறுத்தல்| Dinamalar

மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்:சி.ஐ.டி.யு., கூட்டத்தில் வலியுறுத்தல்

Added : ஆக 24, 2022 | |
அவிநாசி:அவிநாசியில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடைபெற்றது.மாநில தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சந்திரன், மாநில பொருளாளர் அசோகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தீர்மானங்கள் விவரம்:பல போராட்டங்களுக்கு பின், நுால் விலை ஓரளவு குறைந்த நிலையில், தற்பொழுது பஞ்சு விலை ஒரு பொதி, 15

அவிநாசி:அவிநாசியில் தமிழ்நாடு விசைத்தறி தொழிலாளர் சம்மேளன மாநில குழு கூட்டம் சி.ஐ.டி.யு., அலுவலகத்தில் நடைபெற்றது.மாநில தலைவர் முத்துசாமி தலைமை வகித்தார். மாநில பொதுச்செயலாளர் சந்திரன், மாநில பொருளாளர் அசோகன் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.தீர்மானங்கள் விவரம்:பல போராட்டங்களுக்கு பின், நுால் விலை ஓரளவு குறைந்த நிலையில், தற்பொழுது பஞ்சு விலை ஒரு பொதி, 15 ஆயிரம் வரை உயர்ந்துள்ளது. இதனால், நுால் விலையும் உயர்ந்து, தொழில் நெருக்கடியும் தொழிலாளர்களுக்கு வேலையிழப்பும் உருவாகியுள்ளது.மின்சார திருத்த சட்ட மசோதாவால், மின்சார கட்டணம் உயர்ந்துள்ளது. இதனால், விசைத்தறி தொழிலுக்கு இலவச மின்சாரம், 750 யூனிட் பறிபோகும் நிலையும், கைத்தறி விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், ரத்து ஆகும் சூழ்நிலையும் உருவாகியுள்ளது.தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும். விசைத்தறி தொழிலாளி மற்றும் அனைத்து தொழிலாளர்களுக்கும், 20 நாள் முன் தீபாவளி போனஸ் வழங்க வேண்டும்.இந்த கோரிக்கைகளை முன்வைத்து, அடுத்த மாதம், 5 முதல் 10ம் தேதி வரை தமிழக முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்துவது, என முடிவு செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X