வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு கட்டணத்தை செலுத்திய தி.மு.க.,

Added : ஆக 24, 2022 | |
Advertisement
நாகர்கோவில் : பொக்கை வாய் சிரிப்பில் முதல்வர் ஸ்டாலினை கவர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி வேலம்மாள் பாட்டிக்கு 80, அரசு வீடு வழங்கியது. அதற்கான கட்டணத்தை தி.மு.க. செலுத்தியது.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் கொரோனா நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. புத்தேரி அருகே ஒரு ரேஷன் கடையில் நான்கு ரூ.500 தாள்களை கண்ட பூரிப்பில் வேலம்மாள் பாட்டி சிரித்த சிரிப்பை போட்டோகிராபர்
வேலம்மாள் பாட்டிக்கு அரசு வீடு  கட்டணத்தை செலுத்திய தி.மு.க.,



நாகர்கோவில் : பொக்கை வாய் சிரிப்பில் முதல்வர் ஸ்டாலினை கவர்ந்த கன்னியாகுமரி மாவட்டம் புத்தேரி வேலம்மாள் பாட்டிக்கு 80, அரசு வீடு வழங்கியது. அதற்கான கட்டணத்தை தி.மு.க. செலுத்தியது.தி.மு.க. அரசு பொறுப்பேற்றதும் கொரோனா நிதியாக ரூ.2 ஆயிரம் வழங்கப்பட்டது. புத்தேரி அருகே ஒரு ரேஷன் கடையில் நான்கு ரூ.500 தாள்களை கண்ட பூரிப்பில் வேலம்மாள் பாட்டி சிரித்த சிரிப்பை போட்டோகிராபர் ஜாக்சன் கேமராவில் பிடித்து வெளியிட்டார்.

இந்த போட்டோவை கவனித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட டுவிட்டர் பதிவில் இது போன்ற ஏழை தாய்மார்களின் சிரிப்புதான் நமது அரசின் சிறப்பு என குறிப்பிட்டார்.நாகர்கோவில் வந்த முதல்வர், வேலம்மாள் பாட்டியை சந்தித்தபோது தனக்கு முதியோர் பென்ஷன், குடியிருக்க வீடு வேண்டும் என அவரிடம் கோரிக்கை வைத்தார். முதல்வர் உத்தரவில் மாதம் ரூ.ஆயிரம் வழங்கப்பட்டது. வீடு வழங்குவதில் இழுபறி நீடித்தது.பாட்டியை தி.மு.க. அரசு ஏமாற்றியதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. இது வைவரலான நிலையில் நேற்று முன்தினம் இரவு நாகர்கோவில் ஆர்.டி.ஓ. சேதுராமலிங்கம் வேலம்மாள் பாட்டிக்கு வீடு வழங்கும் ஆணையை வழங்கினார்.

வீடு பாட்டியின் இருப்பிடத்திலிருந்து 30 கி.மீ. துாரத்தில் அஞ்சுகிராமத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய தொகுப்பு குடியிருப்பை சேர்ந்தது.ஆள் அரவமற்ற பகுதியில் வீடு இருப்பதால் பாட்டியின் வாழ்வாதாரம் என்ன ஆகும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. பாட்டிக்கு தற்போது குடியிருக்கும் புளியடியில் உள்ள தொகுப்பு வீட்டை வழங்காதது ஏன் என்ற கேள்வியை சிலர் எழுப்பியுள்ளனர்.தற்போது வழங்கப்பட்ட வீட்டின் மதிப்பு ரூ.7.50 லட்சம். அரசு நிர்ணயித்த முன்கட்டணம் ரூ.76 ஆயிரத்தை தி.மு.க. நிர்வாகி பூதலங்கம்பிள்ளை கலெக்டரிடம் செலுத்தினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X