நீலகிரியில் அபாயகரமான மரங்கள்:உடனே அகற்ற கண்காணிப்பு அலுவலர் உத்தரவு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
ஊட்டி;''நீலகிரியில் அபாயகரமான மரங்களை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அகற்ற வேண்டும்,'' என, கண்காணிப்பு அலுவலர் கூறினார்.ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பேசியதாவது: நீலகிரியில், பல்வேறு துறைகளின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் குறித்து

ஊட்டி;''நீலகிரியில் அபாயகரமான மரங்களை ஆய்வு மேற்கொண்டு உடனடியாக அகற்ற வேண்டும்,'' என, கண்காணிப்பு அலுவலர் கூறினார்.ஊட்டி தமிழக விருந்தினர் மாளிகையில், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தலைமையில் மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. கண்காணிப்பு அலுவலர் வெங்கடேஷ் பேசியதாவது: நீலகிரியில், பல்வேறு துறைகளின் கீழ், மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. தென்மேற்கு பருவமழையில் பேரிடர் தடுப்பு நடவடிக்கையில் அனைத்து துறை ஒருங்கிணைப்புடன் சிறப்பாக மேற்கொண்டுள்ளனர்.குறிப்பாக, மாவட்டத்தில் குடியிருப்புகள்; கல்வி நிறுவனங்கள்; கோவில்கள்; சாலை ஓரங்களில் அபாயகரமான நிலையில் உள்ள மரங்களை ஆய்வு செய்து, உடனடியாக அகற்ற வேண்டும். மாற்றுத்திறனாளி நலத்துறை மூலம் செயல்படுத்தும் திட்டங்கள் குறித்து போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு அனைத்து அரசின் சலுகைகளும் கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, வெங்கடேஷ் பேசினார். முன்னதாக, ஊட்டி காந்தளில் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், நடந்து வரும் அறிவுசார் மையம், நூலகம் அமைக்கும் பணி,கோடப்பமந்தில் நிலச் சரிவு தடுக்கும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார். கலெக்டர் அம்ரித் உட்பட அரசு துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X