'ஸ்மார்ட் சிட்டி' கோவையில் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ்' கண்காட்சி! கோலாகலமான 4 நாள் 'ஷாப்பிங்' திருவிழா நாளை துவக்கம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
கோவை மக்களை குடும்பத்தோடு குதுாகலப்படுத்தும், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி, கொடிசியா வளாகத்தில் நாளை கோலாகலமாகத் துவங்கவுள்ளது.தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில், சொல்லிக் கொள்ளும் வகையிலான பெரிய பொழுது போக்கு அம்சங்கள் இல்லை. அதனால்தான், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பல நுாறு கோடி ரூபாய் செலவில் குளங்களில், புதிதாக பொழுதுபோக்கு அம்சங்கள்

கோவை மக்களை குடும்பத்தோடு குதுாகலப்படுத்தும், 'தினமலர்' ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் கண்காட்சி, கொடிசியா வளாகத்தில் நாளை கோலாகலமாகத் துவங்கவுள்ளது.தமிழகத்தின் இரண்டாவது பெரிய நகரமான கோவையில், சொல்லிக் கொள்ளும் வகையிலான பெரிய பொழுது போக்கு அம்சங்கள் இல்லை. அதனால்தான், 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தில், பல நுாறு கோடி ரூபாய் செலவில் குளங்களில், புதிதாக பொழுதுபோக்கு அம்சங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. பணிகளே முடியாத நிலையிலும், அதைத் தேடி நாடி வரும் மக்கள் கூட்டம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டிருக்கிறது.
தியேட்டர், ஷாப்பிங் மால், கோவில்கள், குளங்கள் என எங்கே போனாலும், அதிகபட்சம் இரண்டு, மூன்று மணி நேரத்துக்கு மேல் பொழுதை போக்க முடியாது. ஆனால், ஒரு நாள் முழுவதையும் உற்சாகமாகக் கழிக்கலாம் என்றால், அதற்கான ஒரே வழி, 'தினமலர்' நடத்தும் 'ஸ்மார்ட் ஷாப்பர்ஸ் எக்ஸ்போ'வுக்குப் போவது மட்டும்தான். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்படும் இந்த கண்காட்சி, கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாத நிலையில், இந்த ஆண்டில் மீண்டும் நான்கு நாட்கள் நடக்கவுள்ளது.கொடிசியா தொழிற்காட்சி வளாகமே, இந்த கண்காட்சிக்காக கோலாகலமாகத் தயாராகி கொண்டிருக்கிறது. கண்காட்சியில், வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல்வேறு நிறுவனங்கள், கைவினைக் கலைஞர்கள், உணவுப் பொருள் தயாரிப்பாளர்கள் பங்கேற்கும், 250க்கும் மேற்பட்ட ஸ்டால்கள் இடம்பெறுகின்றன. எலக்ட்ரானிக்ஸ், பர்னிச்சர், பேன்ஸி, காஸ்மெடிக்ஸ், ஜவுளி உள்ளிட்ட பல வகையான பொருட்களை தயாரிக்கும் பன்னாட்டு நிறுவனங்களும் அரங்குகளை அமைத்துள்ளன.இரண்டு ஆண்டுகளாக இத்தகைய கண்காட்சிகள் எதுவும் நடக்கவில்லை என்பதால், வாடிக்கையாளர்களுக்கு சலுகைகளை வாரி வழங்குவதற்கு நிறுவனங்கள் காத்திருக்கின்றன. அதேபோன்று, இரண்டு ஆண்டு இடைவெளியில், மார்க்கெட்டில் புதிதாக வந்துள்ள அனைத்து வகையான பொருட்களும் இங்கு காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அதனால் 'ஷாப்பிங்' விருப்பமுள்ளவர்களுக்கு, இந்த கண்காட்சி போதும் போதுமென்கிற அளவுக்கு விருந்து படைப்பதாக இருக்குமென்பது நிச்சயம். தமிழகத்தில் சென்னையை விட, கோவையில் ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் தொழில் அமோகமாக நடந்து வருவதாக, சமீபத்திய கணக்கெடுப்புகள் உறுதிப்படுத்தியுள்ளன. எனவே, கோவை மக்கள் பலரின் இல்லக்கனவுகளை இனிதாக நிறைவேற்ற, இந்த கண்காட்சியுடன் சேர்த்து, 'பில்டு எக்ஸ்போ' கண்காட்சியும் நடக்கவுள்ளது. நிலம், வீடு வாங்கும் திட்டமிருப்பவர்கள், இதைத் தவற விடாதீர்கள். அதேபோன்று, கோவையில்தான் தனிநபர் வாகனங்கள் வைத்திருப்போர் எண்ணிக்கை அதிகம். வாகன விரும்பிகள், ஒரே இடத்தில் பல விதமான கார்களையும் பார்த்து, அவற்றின் விபரங்களைச் சேகரித்து கொள்வதற்கு வசதியாக, இந்த கண்காட்சியுடன் சேர்த்து, 'ஆட்டோமொபைல்ஸ்' கண்காட்சியும் நடத்தப்படுகிறது.நிஜமான கொண்டாட்டம் என்பது மழலைகளையும், குழந்தைகளையும் மகிழ்ச்சிப்படுத்துவதுதான். அதற்கேற்ப, குட்டீஸ்களை குஷிப்படுத்தும் பல புத்தம் புதிய பொழுது போக்கு, விளையாட்டு அம்சங்கள் இதில் இடம் பெறுகின்றன. முக்கியமாக, முதல் முறையாக 'ஜக்லர்ஸ் ஷோ' நடத்தப்படுகிறது. மிரட்டலான 'மேஜிக் ஷோ', குட்டீஸ்கள் மட்டுமின்றி, பெரியவர்களையும் பெரிதும் ரசிக்க வைக்கும். இவற்றுடன் ஒட்டக சவாரி, பலுான் விளையாட்டுகள் என கிட்ஸ் பிளே ஏரியா, கிறுகிறுக்க வைக்கவுள்ளது. இந்த ஆண்டு கண்காட்சியின் ஹைலைட்டே 'புட்கோர்ட்' என்று சொல்லும் அளவுக்கு, சைவம், அசைவம் என இரண்டிலும், விதவிதமாய் விருந்து படைக்க உயர்தர உணவகங்கள் காத்திருக்கின்றன.
பல்வேறு மாநிலங்களின் சமையற்கலைஞர்கள், நேரடியாக தங்கள் உணவு அரங்குகளை இங்கு அமைப்பதால், அந்த மாநிலங்களின் சுவையை அச்சு அசலாக சுவைக்கும் வாய்ப்பு கிடைக்கும். அதைத் தவிர்த்து, சாட் அயிட்டம், ஐஸ்க்ரீம், மாக்டைல் என ஹாட் ஆகவும், சில் ஆகவும் ருசிக்க பல விஷயங்கள் உள்ளன.கண்காட்சி, காலை, 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை நடைபெறும். ஆறு வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு, 50 ரூபாய் கட்டணம். வார இறுதி நாளில்தான் கண்காட்சிக்குச் செல்ல வேண்டுமென்றில்லை. துவங்கும் நாளான நாளையே சென்றால், இன்னும் ரிலாக்ஸ் ஆக, ஜாலியாக ஷாப்பிங் செய்யலாம்.-நமது நிருபர்-


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X