இன்று ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழா :அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு 'சீட்'

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (9) | |
Advertisement
கோவை :கோவையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு மேடையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.கோவை ஈச்சனாரி அருகே இன்று நடக்கும் அரசு விழாவில், ஒரு லட்சத்து, 7,061 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார். முடிக்கப்பட்ட பணிகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைப்பதோடு, புதிய
முதல்வர் ஸ்டாலின், அரசு விழா, அதிமுக எம்எல்ஏ, CM Stalin, Government function, AIADMK MLA,


கோவை :கோவையில் இன்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கும் அரசு விழாவில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,வுக்கு மேடையில் முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்
பட்டுள்ளது.

கோவை ஈச்சனாரி அருகே இன்று நடக்கும் அரசு விழாவில், ஒரு லட்சத்து, 7,061 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழங்குகிறார்.


latest tamil news




முடிக்கப்பட்ட பணிகளை பயன்பாட்டுக்கு துவக்கி வைப்பதோடு, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.விழா மேடையில், 16 இருக்கைகள் போடப்படுகின்றன. முதல்வருடன், மாநகராட்சி கமிஷனர், கலெக்டர், டி.ஆர்.ஓ., மேயர், மூன்று எம்.பி.,க்
கள், ஏழு அமைச்சர்கள், தொகுதி எம்.எல்.ஏ., ஆகியோருக்கு இருக்கை போடப்பட்டுள்ளது.

விழா நடக்குமிடம் கிணத்துக்கடவு தொகுதி என்பதால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தாமோதரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருப்பதோடு, முதல் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவ., 22ல் கோவை வ.உ.சி., மைதானத்தில் விழா நடந்தபோது, தெற்கு தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில், பா.ஜ.,வைச் சேர்ந்த வானதி சீனிவாசனுக்கு இருக்கை ஒதுக்கியதோடு, பேசுவதற்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டது.
முதல்வர் முன்னிலையில் அவர் பேசி, தொகுதியின் தேவையை எடுத்துரைத்தார். அதேபோல், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., தாமோதரன் பங்கேற்று, தொகுதியின் தேவையை எடுத்துரைப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anand - chennai,இந்தியா
24-ஆக-202210:26:19 IST Report Abuse
Anand இதில் பீத்திக்கொள்வதற்கு என்ன இருக்கு.........
Rate this:
Cancel
24-ஆக-202210:20:44 IST Report Abuse
தமிழ் இதில் என்ன இருக்கிறது. அரசு விழாவுக்கு தொகுதி mla என்னும் முறையில் அழைத்துதான் ஆகவேண்டும்.
Rate this:
Cancel
ThiaguK - Madurai,இந்தியா
24-ஆக-202210:14:45 IST Report Abuse
ThiaguK துணிச்சலோடு இந்த ஆட்சியாளரின் அவங்களையும் அட்டுழியங்களையும் சொல்லுவாரா பாப்போம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X