விபத்தில் பலியான முன்னாள் ராணுவ வீரர் குடும்பத்திற்கு ரூ.52.92 லட்சம் இழப்பீடு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
ஸ்ரீவில்லிபுத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பஸ் விபத்தில் பலியான முன்னாள் ராணுவ வீரர் சுந்தரராஜன் 53, குடும்பத்திற்கு ரூ. 52.92 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். 2017ல் ராமநாதபுரம் மாவட்டம்


ஸ்ரீவில்லிபுத்தூர் : ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளியில் பஸ் விபத்தில் பலியான முன்னாள் ராணுவ வீரர் சுந்தரராஜன் 53, குடும்பத்திற்கு ரூ. 52.92 லட்சம் இழப்பீடு வழங்க ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மகாராஜபுரத்தை சேர்ந்தவர் சுந்தரராஜன். 2017ல் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி ஐ.என்.எஸ். பருந்து ராணுவதளத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார் அந்தாண்டு மே 22 மதியம் ராமநாதபுரத்திற்கு வந்து பொருட்கள் வாங்கிவிட்டு தனியார் பஸ்ஸில் உச்சிப்புளி திரும்பினார். இறங்கியபோது டிரைவர் அதிவேகமாக பஸ்சை எடுத்ததால், சுந்தரராஜன் தவறி விழுந்து பலத்த காயமடைந்து இறந்தார்.

அவரது குடும்பத்தினர் இழப்பீடு கோரி ஸ்ரீவில்லிபுத்தூர் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு கோருரிமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.அதன்படி சுந்தரராஜன் குடும்பத்தினருக்கு ரூ. 52 லட்சத்து 92 ஆயிரத்து 651 இழப்பீடாக, கோவை ஓரியண்டல் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்க முதன்மை சார்பு நீதிபதி செல்வன் ஜேசுராஜா உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X