விலை உயராமல் இருக்க பதுக்கலை தடுக்குமா அரசு?

Added : ஆக 24, 2022 | கருத்துகள் (1) | |
Advertisement
சென்னை : பண்டிகை சீசன் துவங்கியுள்ளதால், உணவு தானியங்களை பதுக்கி, செயற்கையாக விலை உயர்த்தப்படுவதை தடுக்க, முக்கிய சந்தைகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது. தமிழகத்திற்கு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, மிளகாய், தனியா, கடுகு, சீரகம், மிளகு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள், பல்வேறு
விலை உயராமல் இருக்க பதுக்கலை தடுக்குமா அரசு?


சென்னை : பண்டிகை சீசன் துவங்கியுள்ளதால், உணவு தானியங்களை பதுக்கி, செயற்கையாக விலை உயர்த்தப்படுவதை தடுக்க, முக்கிய சந்தைகளில் அதிகாரிகள் தொடர் ஆய்வு செய்ய, தமிழக அரசு உத்தரவிட வேண்டிய அவசியம் ஏற்பட்டுஉள்ளது.

தமிழகத்திற்கு துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, மிளகாய், தனியா, கடுகு, சீரகம், மிளகு, புளி உள்ளிட்ட மளிகை பொருட்கள், பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் லாரிகளில் எடுத்து வரப்படுகின்றன.சிலர், பண்டிகை சீசனில் அதிக லாபம் ஈட்டுவதற்காக, முக்கிய தானியங்களை பதுக்கி வைத்து, செயற்கை தட்டுப்பாட்டை ஏற்படுத்துவதால், அவற்றின் விலை உயர்ந்து மக்கள் சிரமப்படுவது தொடர்கிறது.

நாடு முழுதும் வரும், 31ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. அதை தொடர்ந்து நவராத்திரி, விஜயதசமி, ஆயுதபூஜை, தீபாவளி என, தொடர்ந்து ஹிந்து பண்டிகைகள் வருகின்றன. இதனால், மளிகை பொருட்கள், உணவு தானியங்கள், எண்ணெய் வகைகள் போன்றவற்றிற்கு வழக்கத்தை விட, அதிக தேவை இருக்கும்.

எனவே, தானியங்களை பதுக்கி, செயற்கையாக விலை உயர்த்தப்படுவதை தடுக்க, சென்னை, மதுரை உட்பட மாநிலம் முழுதும் உள்ள முக்கிய சந்தைகளில், ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு, அரசு உத்தரவிட வேண்டும்.பதுக்கலில் ஈடுபடுவோர் மீது, உரிமம் ரத்து போன்ற கடும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
24-ஆக-202206:57:05 IST Report Abuse
Dharmavaan இதை எப்போதுமே செய்தால் விலைவாசி உயராது.கையூட்டு வாங்கும் அதிகாரிகள் இதை செய்வார்களா என்பது சந்தேகமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X