கலெக்டர் அலுவலக கட்டுமான விதிமீறல் வழக்கு; விபரம் கோரும் உயர்நீதிமன்றம்

Updated : ஆக 24, 2022 | Added : ஆக 24, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
மதுரை : தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியின்றி மேற்கொள்வதாகவும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில் தமிழக அரசிடம் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.திருநெல்வேலி முத்துராமன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி
தென்காசி கலெக்டர் அலுவலகம், கட்டுமான விதிமீறல், மதுரை உயர்நீதிமன்றம்,Tenkasi Collector Office, Madurai High Court,

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் headphone


மதுரை : தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமானம் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணைய அனுமதியின்றி மேற்கொள்வதாகவும், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மீது நடவடிக்கை கோரியும் தாக்கலான வழக்கில் தமிழக அரசிடம் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று தெரிவிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.


latest tamil news


திருநெல்வேலி முத்துராமன் தாக்கல் செய்த பொதுநல மனு:திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பிரித்து தென்காசி புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது. தென்காசியில் புதிய கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. 20 ஆயிரம் சதுர மீட்டருக்கு மேல் கட்டுமானம் மேற்கொள்ள மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் தடையில்லாச் சான்று அனுமதி பெறுவது சட்டப்படி கட்டாயம். தென்காசி கலெக்டர் அலுவலக கட்டுமானத்திற்கு அத்தகைய அனுமதி பெறவில்லை.

இதில் விதிமீறல் உள்ளது.கட்டுமானத்தால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படும். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் திருநெல்வேலி பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு ஏன் உங்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கக்கூடாது என விளக்கம் கோரி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

கட்டுமானப் பணியை நிறுத்தி வைக்க பரிந்துரைத்துள்ளது. செயற்பொறியாளர் மீது விரைவில் கிரிமினல் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு முத்துராமன் குறிப்பிட்டார்.நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.ேஹமலதா அமர்வு: தமிழக அரசிடம் அதன் வழக்கறிஞர் விபரம் பெற்று ஆக.,26 ல் தெரிவிக்க வேண்டும் என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-202205:48:42 IST Report Abuse
Kasimani Baskaran கட்டிடம் கட்ட அனுமதி கூடவா வாங்காமல் கட்டினார்கள்... ஒரு வேளை செயற்பொறியாளர் திமுக தத்தியாக இருப்பாரோ?
Rate this:
Cancel
Mani . V - Singapore,சிங்கப்பூர்
24-ஆக-202205:03:41 IST Report Abuse
Mani . V இதுக்காக மதுரை உயர்நீதி மன்றம், நீர்நிலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டது அப்படின்னு யாரும் வழக்கு போட முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X