மெட்ரோ ரயில் வழித்தடங்களில் எப்.எஸ்.ஐ., கட்டணம் குறைப்பு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
சென்னை : மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் வழித்தடங்களில், 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு, 'பிரீமியம்' எப்.எஸ்.ஐ., எனப்படும் கூடுதல் தள பரப்புக்கான கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மேலும், மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள்



சென்னை : மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் வழித்தடங்களில், 500 மீட்டர் தொலைவுக்குள் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு, 'பிரீமியம்' எப்.எஸ்.ஐ., எனப்படும் கூடுதல் தள பரப்புக்கான கட்டணம், 50 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது.

சென்னையில் தற்போது, இரண்டு வழித்தடங்களில், மெட்ரோ ரயில் சேவை உள்ளது. மேலும், மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவைக்கான கட்டுமான பணிகள் துவங்கி உள்ளன.சென்னையை தொடர்ந்து, கோவை, மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. அதற்கான சாத்தியக்கூறு அறிக்கைகள் தயாரிக்கப்பட்டு உள்ளன.இந்நிலையில், மெட்ரோ ரயில் சேவை உள்ள வழித்தடங்களில், அதிக எண்ணிக்கையில் மக்கள் குடியேறும் வகையில், கூடுதல் எப்.எஸ்.ஐ., வழங்க, தமிழக அரசு முடிவு செய்தது.இதற்கான ஆய்வு பணிகள், கடந்த ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்டன.தற்போதைய அரசு, மெட்ரோ வழித்தடங்களில் கட்டடங்களுக்கான தளப்பரப்பு குறியீட்டு கட்டணத்தில், சலுகை வழங்க முடிவு செய்தது.

இது தொடர்பாக, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை செயலர் ஹிதேஷ்குமார் மக்வானா பிறப்பித்துள்ள அரசாணை:தற்போது செயலில் உள்ள மெட்ரோ ரயில் வழித்தடங்கள், மெட்ரோ திட்டப் பணிகள் நடக்கும் வழித்தடங்கள், உத்தேசிக்கப்பட்டுள்ள வழித்தடங்கள் ஆகியவற்றில், 500 மீட்டர் தொலைவு வரை கட்டப்படும் கட்டடங்களுக்கு, கூடுதல் தளப்பரப்பு குறியீடு பெறுவதற்கான கட்டணங்கள், 50 சதவீதமாக குறைக்கப்படுகிறது.இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.

பயன் என்ன?
பொது கட்டட விதிகளின் அடிப்படையில், தமிழகம் முழுதும், அதிக உயரமில்லாத அடுக்குமாடி கட்டடங்கள் கட்டும்போது கூடுதல் தளப்பரப்பு குறியீடு பெற்றால், அப்பகுதிக்கு பதிவுத் துறை நிர்ணயித்துள்ள நில வழிகாட்டி மதிப்பில், 50 சதவீத தொகையை கட்டணமாக செலுத்த வேண்டும். அதிக உயரமான கட்டடங்களுக்கு கூடுதல் தளபரப்பு குறியீடு பெற, வழிகாட்டி மதிப்பில், 40 சதவீத தொகையை செலுத்த வேண்டும்.

தமிழக அரசின் புதிய அறிவிப்பு காரணமாக, மெட்ரோ வழித்தடத்தில் கட்டப்படும் அடுக்குமாடி கட்டடங்களுக்கு, வழிகாட்டி மதிப்பில், 25 மற்றும் 20 சதவீத கட்டணம் மட்டும் வசூலிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X