தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் கைது

Added : ஆக 24, 2022 | |
Advertisement
ராமநாதபுரம் : சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக இலங்கையை சேர்ந்த அப்துல் ரியாஸ்கானை கைது செய்து 16 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் சேதுபதிநகரை சேர்ந்த வசந்த், செல்வகுமார், மகிதாராணி ஆகியோரது வீடுகளில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கேணிக்கரை
தொடர் கொள்ளையில் ஈடுபட்ட இலங்கை வாலிபர் கைது


ராமநாதபுரம் : சென்னை, கோவை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்டதாக இலங்கையை சேர்ந்த அப்துல் ரியாஸ்கானை கைது செய்து 16 பவுன் நகைகள், ரூ.45 ஆயிரம் மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் சேதுபதிநகரை சேர்ந்த வசந்த், செல்வகுமார், மகிதாராணி ஆகியோரது வீடுகளில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது. கேணிக்கரை போலீசார் விசாரித்தனர். வீடுகளில் தடயவியல் நிபுணர்கள் சேகரித்த கைரேகைகள் கோவை கொள்ளையில் ஈடுபட்டு தலைமறைவான அப்துல் ரியாஸ்கான் கைரேகையுடன் ஒத்து போனது தெரிந்தது.

இன்ஸ்பெக்டர் ஆடிவேல் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை போலீசார் அவரை தேடினர். புதுச்சேரி அண்ணாநகரில் பதுங்கியிருந்த அப்துல் ரியாஸ்கானை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து நகைகள், பணம், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.இலங்கை திரிகோணமலையை சேர்ந்த அவர் 2019 ல் கள்ளப்படகு மூலம் தமிழகம் வந்து புதுச்சேரியில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். சில மாதங்களுக்கு முன் ராமநாதபுரம் அருகே முகமதியாபுரத்தில் தங்கியிருந்தார். அப்போது ஆளில்லாத வீடுகளின் கதவை உடைத்து பணம், நகைகளை கொள்ளையடித்துள்ளார். இவர் மீது பல்வேறு இடங்களில் 12 வழக்குகள் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X