போலீஸ் அதிகாரிகள் 'டார்ச்சர்' விஷம் குடித்தார் பெண் இன்ஸ்.,

Added : ஆக 24, 2022 | |
Advertisement
திருநெல்வேலி : பணிச்சுமை மற்றும் அதிகாரிகள், 'டார்ச்சர்' காரணமாக, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, 45. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பணிச்சுமை மற்றும் அதிகாரிகள் டார்ச்சரால் அவதிப்பட்டு
போலீஸ் அதிகாரிகள்  'டார்ச்சர்'  விஷம் குடித்தார் பெண் இன்ஸ்.,


திருநெல்வேலி : பணிச்சுமை மற்றும் அதிகாரிகள், 'டார்ச்சர்' காரணமாக, ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தற்கொலைக்கு முயன்று, ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, 45. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த இவர், பணிச்சுமை மற்றும் அதிகாரிகள் டார்ச்சரால் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அதிகாரிகள் நடத்திய ஆய்வு கூட்டத்திற்கு பிறகு, உயர் அதிகாரி ஒருவர் அவரை திட்டியுள்ளார். மனம் வெறுத்த இன்ஸ்பெக்டர் சாந்தகுமாரி, நேற்று முன்தினம் இரவு, 9:00 மணிக்கு போலீஸ் ஸ்டேஷனில் இருந்த கொசு மருந்து திரவத்தை குடித்தார்.இதனால் மயங்கிய அவரை, திருநெல்வேலி தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். சர்க்கரை நோய் பாதிப்பு இருப்பதால் அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளது.இவர், மூன்று மாதங்களுக்கு முன், ஆலங்குளத்திற்கு மாற்றப்பட்டார்.

தென்காசி மாவட்டத்தை திருநெல்வேலி மாவட்டத்தில் இருந்து பிரித்து, இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகியும், இன்னமும் போதிய வாகனங்கள் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்படவில்லை.இதனால், 'போக்சோ' வழக்குகள், பெண் பாதுகாப்பு திட்ட வழக்குகள் சம்பந்தமாக நீதிமன்றம் செல்ல போதிய வசதியின்றி இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட போலீசார் சிரமப்பட்டுள்ளனர். இன்ஸ்பெக்டரின் கணவர், இரு மகள்கள் மதுரையில் வசிக்கின்றனர்.பெண் இன்ஸ்பெக்டர் விஷம் குடித்த சம்பவம் குறித்து, தென்காசி எஸ்.பி., கிருஷ்ணராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X