கைகழுவுவதை கடைபிடித்தால் மழை கால நோயை தடுக்கலாம்: டீன் பாலாஜிநாதன் பேச்சு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
தேனி : ' நமது சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து கொண்டும், கைகழுவும் வழிமுறைகளை முறையாக கடைபிடித்தால் மழை கால நோயை தடுக்கலாம்.' என, தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் டீன் பாலாஜிநாதன் பேசினார்.தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சமூக சார்ந்த நோய் தடுப்புத்துறை சார்பில், 'பருவ மழை நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறை முன்னேற்பாடுகள்' என்ற
கைகழுவுவதை கடைபிடித்தால் மழை கால நோயை தடுக்கலாம்: டீன் பாலாஜிநாதன் பேச்சு

தேனி : ' நமது சுற்றுப்புறங்களை சுகாதாரமாக வைத்து கொண்டும், கைகழுவும் வழிமுறைகளை முறையாக கடைபிடித்தால் மழை கால நோயை தடுக்கலாம்.' என, தேனி அரசு மருத்துவக் கல்லுாரியில் நடந்த கருத்தரங்கில் டீன் பாலாஜிநாதன் பேசினார்.

தேனி மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சமூக சார்ந்த நோய் தடுப்புத்துறை சார்பில், 'பருவ மழை நோய் தடுப்பு பாதுகாப்பு வழிமுறை முன்னேற்பாடுகள்' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. துணை முதல்வர் எழிலரசன், மருத்துவ கண்காணிப்பாளர் இளங்கோவன், துணை கண்காணிப்பாளர் கண்ணன்போஜராஜ் முன்னிலை வகித்தனர். துறைத் தலைவர் டாக்டர் திருவேங்கடம் வரவேற்றார். டாக்டர் வீரக்குமார், 'தொற்று நோய்கள்' குறித்தும், டாக்டர் சரவணன்நந்து, 'மழை கால நோய்களில் இருந்து வளரிளம் பருவத்தினர் தற்காத்து கொள்ளுதல்' பற்றியும், குழந்தைகள் தற்காப்பு குறித்து டாக்டர் வசந்தமலரும், முன் எச்சரிக்கை வழிமுறைகள் பற்றி டாக்டர் ராம்பிரபாகர், பேசினர்.

டாக்டர் கீதாஞ்சலி நன்றி தெரிவித்தார். முன்னதாக 'மழை கால நோய் தடுப்பு விழிப்புணர்வு கண்காட்சி, ஊர்வலம் நடந்தது. இதில் டெங்கு, மலேரியா கொசுகளின் வளர்ச்சி நிலை, நோயாளிகளை கையாளும் விதம், கொசுவலை பயன்படுத்தும் முறை, மைக்ரோஸ்கோபி மூலம் கொசுகளின் பல்வேறு வளர்ச்சி நிலைகளை காண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.மருத்துவ மாணவர்கள், நர்சிங் பயிற்சி கல்லுாரி மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர். ஏற்பாடுகளை டாக்டர்கள் வேல்முருகன், சரண்யா செய்திருந்தனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X