கேந்திரிய பள்ளிகளுக்கான தடகள போட்டிகள் துவக்கம்

Added : ஆக 24, 2022 | |
Advertisement
மதுரை : சென்னை மண்டல அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே மதுரை ரேஸ்கோர்ஸில் மூன்றுநாள் ஆண்கள் தடகள போட்டிகள் துவங்கின.லேடி டோக் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் சாந்த மீனா தொடங்கி வைத்தார். இதில் 600 மீ., ஓட்டப்பந்தயம் 14 வயது பிரிவில் முதலிடம் கே.வி., கில்நகர் சிக்கந்ரா அலி, 2ம் இடம் ஆவடி சி.ஆர்.பி.எப்., தபாஷ்வின், 3ம் இடம் காரைக்குடி பள்ளியின் கமலேஷ் பெற்றனர்.800 மீ.,
கேந்திரிய பள்ளிகளுக்கான தடகள போட்டிகள் துவக்கம்

மதுரை : சென்னை மண்டல அளவிலான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்கிடையே மதுரை ரேஸ்கோர்ஸில் மூன்றுநாள் ஆண்கள் தடகள போட்டிகள் துவங்கின.

லேடி டோக் கல்லுாரி உடற்கல்வி இயக்குநர் சாந்த மீனா தொடங்கி வைத்தார். இதில் 600 மீ., ஓட்டப்பந்தயம் 14 வயது பிரிவில் முதலிடம் கே.வி., கில்நகர் சிக்கந்ரா அலி, 2ம் இடம் ஆவடி சி.ஆர்.பி.எப்., தபாஷ்வின், 3ம் இடம் காரைக்குடி பள்ளியின் கமலேஷ் பெற்றனர்.800 மீ., ஓட்டப்பந்தயம் 17 வயது பிரிவில் முதலிடம் ஆவடி எச்.வி.எப்., அத்வைத் லதீஸ், 2ம் இடம் மதுரை நரிமேடு கே.வி., பள்ளியின் வேல்பாண்டி, 3ம் இடம் நாகர்கோவில் பள்ளியின் சத்ய பிரியன் பெற்றனர்.

19 வயது பிரிவில் முதலிடம் ஆவடி சி.ஆர்.பி.எப்., முகில், 2ம் இடம் கோவை கே.வி. பள்ளியின் தனுஷ், 3ம் இடம் திருச்சி ஓ.எப்.டி., அம்பேத்கர் பெற்றனர்.குண்டு எறிதல் 14 வயது பிரிவில் முதலிடம் தாம்பரம் ஏ.எப்.எஸ்., கிருஷ்ண குமரன், 2ம் இடம் அடையாறு சி.எல்.ஆர்.ஐ., தருண் ஆதித்யா, 3ம் இடம் கே.வி. கில்நகர் சிக்கந்ரா அலி பெற்றனர்.

17 வயது பிரிவில் முதலிடம் சூலுார் ஏ.எப்.எஸ்., ஹர்ச வரதன், 2ம் இடம் காரைக்குடி கே.வி., பள்ளியின் மணீஷ் ராம், 3ம் இடம் சென்னை சி.எல்.ஆர்.ஐ., கவ்ரங் கிருஷ்ணா பெற்றனர்.19 வயதுக்கான நீளம் தாண்டுதலில் முதலிடம் ஆவடி ஐச்.வி.எப்., அஸ்வந்த், 2ம் இடம் ஆவடி ஐச்.வி.எப்., விஷால், 3ம் இடம் தாம்பரம் கே.வி., பள்ளியின் ஜெரி வினிபெர்ட் பெற்றனர்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X