செருப்பு வீசிய விவகாரம்; பா.ஜ., செயலாளரிடம் விசாரணை

Added : ஆக 24, 2022 | |
Advertisement
மதுரை : மதுரையில் அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினத்திடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை ராணுவவீரர் லட்சுமணன் உடல் ஆக.,13ல் விமானம் மூலம் வந்தது. அஞ்சலி செலுத்துவது தொடர்பாக அமைச்சர் தியாகராஜனுடன் பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில்

மதுரை : மதுரையில் அமைச்சர் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய வழக்கில் பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினத்திடம் 3 மணி நேரம் விசாரணை நடந்தது.

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரமரணமடைந்த மதுரை ராணுவவீரர் லட்சுமணன் உடல் ஆக.,13ல் விமானம் மூலம் வந்தது. அஞ்சலி செலுத்துவது தொடர்பாக அமைச்சர் தியாகராஜனுடன் பா.ஜ.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட அமைச்சரின் கார் மீது செருப்பு வீசப்பட்டது. இதுதொடர்பாக 3 பெண்கள் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர்.இவ்வழக்கில் பா.ஜ., அரசு தொடர்பு பிரிவு மாநில செயலாளர் ராஜரத்தினமும் விசாரணைக்கு உள்ளானார்.

நேற்றுமுன்தினம் இரவு பழங்காநத்தம் அலுவலகத்தில் இருந்தவரை தனிப்படை போலீசார் அவனியாபுரம் ஸ்டேஷனிற்கு அழைத்துச்சென்றனர். மூன்று மணி நேரம் நடந்த விசாரணையில் செருப்பு வீசியபோது யார் யாரெல்லாம் இருந்தனர், விமான நிலையத்தில் யார் இருந்தனர் போன்ற விபரங்களை கேட்டனர்.

ராஜரத்தினம் கூறியதாவது: சம்பவத்தன்று நான் விமான நிலையத்திற்கே செல்லவில்லை. ஆனால் வழக்கில் என் பெயரை சேர்த்துள்ளனர். யாரெல்லாம் வந்தார்கள் என போலீசார் விசாரித்தனர். அதை விசாரிப்பது அவர்களது வேலை. அதை விடுத்து சம்பந்தமே இல்லாமல் என்னிடம் விசாரித்தனர். இது உளவுத்துறை 'வீக்' ஆனதையே காட்டுகிறது, என்றார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X