கோப்ரா பட விழாவில் தள்ளு, முள்ளு; நெரிசலில் மாணவர்கள் மயக்கம்| Dinamalar

'கோப்ரா' பட விழாவில் தள்ளு, முள்ளு; நெரிசலில் மாணவர்கள் மயக்கம்

Added : ஆக 24, 2022 | |
மதுரை : மதுரையில் நடைபெற்ற 'கோப்ரா' பட விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் பலர் மயங்கி விழுந்தனர். ஆம்புலன்ஸ் வர வழியில்லாததால் சக மாணவர்களே தூக்கி சென்றனர்.நடிகர் விக்ரம் நடிப்பில் ஆக. 31-ல் வெளியாகவுள்ள 'கோப்ரா' படத்தின் புரொமோஷன் விழா மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, படக்குழுவினர்
'கோப்ரா' பட விழாவில் தள்ளு, முள்ளு; நெரிசலில் மாணவர்கள் மயக்கம்

மதுரை : மதுரையில் நடைபெற்ற 'கோப்ரா' பட விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கி மாணவர்கள் பலர் மயங்கி விழுந்தனர். ஆம்புலன்ஸ் வர வழியில்லாததால் சக மாணவர்களே தூக்கி சென்றனர்.



நடிகர் விக்ரம் நடிப்பில் ஆக. 31-ல் வெளியாகவுள்ள 'கோப்ரா' படத்தின் புரொமோஷன் விழா மதுரை கோரிப்பாளையம் அமெரிக்கன் கல்லூரி வளாகத்தில் நடந்தது. விக்ரம், நடிகைகள் ஸ்ரீநிதி ஷெட்டி, மிருணாளினி, படக்குழுவினர் கலந்து கொண்டனர்.விழாவில் பங்கேற்க மாலை 3:00 மணி முதலே மாணவர்கள் திரண்டிருந்தனர்.



போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாததால் கடும் தள்ளு முள்ளு ஏற்பட்டது. மாணவர்கள் இரு சக்கர வாகனங்களில் ரோட்டில் திரண்டு சென்றதாலும், ரோட்டின் குறுக்கே நின்று ஆடியதாலும் கோரிப்பாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.



கல்லுாரியில் நடந்த விழா கூட்ட நெரிசலில் சிக்கி பல மாணவர்கள் மயங்கி விழுந்தனர். ஒரு மாணவர் நினைவிழந்தார். கோரிப்பாளையத்தில் நெரிசல் காரணமாக ஆம்புலன்ஸ் வர முடியவில்லை. அவரை சக மாணவர்கள் கைகளில் துாக்கி வந்து ஆட்டோவில் ஏற்றி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.



கல்லூரி வளாகத்தில் ஏராளமான மாணவர்கள் பங்கேற்புடன் சினிமாவிற்கான விளம்பர நிகழ்வை ஏற்பாடு செய்தது அதிருப்தியையும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்யாதது சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X