வளர்ச்சி திட்டம் இல்லை; செந்தில்குமார் பேச்சு

Added : ஆக 24, 2022 | |
Advertisement
புதுச்சேரி : புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை கவர்னர் பெற்றுத் தர வேண்டும் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசினார்.சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாகூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் (தி.மு.க.) பேசியதாவது:கடந்த காலங்களில் இல்லாத வகையில், தீபாவளி, பொங்கல் விழா காலங்களில் இலவச தொகுப்பு வழங்கியது பாராட்டுக்குரியது.பாகூர்

புதுச்சேரி : புதுச்சேரிக்கு கூடுதல் நிதியை கவர்னர் பெற்றுத் தர வேண்டும் என செந்தில்குமார் எம்.எல்.ஏ., சட்டசபையில் பேசினார்.

சட்டசபையில் நேற்று கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பாகூர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் (தி.மு.க.) பேசியதாவது:கடந்த காலங்களில் இல்லாத வகையில், தீபாவளி, பொங்கல் விழா காலங்களில் இலவச தொகுப்பு வழங்கியது பாராட்டுக்குரியது.பாகூர் தொகுதியில் வெள்ள சேதம் ஏற்பட்டபோது ரேஷன் கார்டுதாரர்களுக்கு நிவாரணம் 5000 ரூபாய், 1500 ரூபாய் வழங்கியதை வரவேற்கிறேன். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பெண்களின் திருமண உதவித்தொகையை 75,000 ரூபாயாக உயர்த்தியதை வரவேற்கிறேன்.

புதுச்சேரியின் குறைந்தபட்சம் பொருளாதார வளர்ச்சி என்பது கடந்த காலங்களில் 11 முதல் 12 சதவீதம் ஆக இருந்தது. தற்போது இது 2.90 சதவீதமாக உள்ளது. இது மிகப்பெரிய வளர்ச்சி என கூறுவது நியாயமில்லை.இளைஞர்கள் பலர் இன்ஜினியரிங் படித்து விட்டு பல ஆண்டுகளாக வேலை இல்லாமல் உள்ளனர். அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திட்டம் இல்லை. பெண்கள், சுய உதவிக் குழுவினருக்கான வளர்ச்சி திட்டம் இல்லாதது ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.

கவர்னருக்கு அதிகாரம் இருப்பதை போல் பொறுப்புகளும் அதிகளவு உள்ளது.மத்திய அரசின் நிதி உதவி கடந்தாண்டை விட இந்தாண்டு 180 கோடி உயர்வு என கூறுகின்றனர். கவர்னர் கூடுதல் நிதி பெற்றுத் தர வேண்டும். பழைய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்றாலும், வட்டியில்லாமல் புதிய கடன், மாநில அந்தஸ்தை கவர்னர் பெற்றுத் தரவேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X